தயாரிப்பாளர் சங்க தேர்தல் வழக்கு... மீண்டும் கால அவகாசத்தை நீட்டித்தது உயர் நீதிமன்றம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Sep 30, 2020, 7:18 PM IST
Highlights

தற்போது வரை கொரோனா பிரச்சனைகள் நீடித்து வருவதால் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இதனால் தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 30ம் தேதியிலிருந்து நீட்டிக்கும் படி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தரப்பு மீண்டும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகித்து வந்த விஷால் தலைமையிலான அணியினரின் பதவிக்காலம் கடந்த 2019 ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளர் சேகரை தமிழக வணிகவரித்துறை நியமித்தது. தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரி விஷால் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.

 

இதையும் படிங்க: “பாண்டியன் ஸ்டோர்ஸ்” “பாரதி கண்ணம்மா” சீரியல்களில் அதிரடி மாற்றம்... பிக்பாஸுக்காக விஜய் டிவி செய்த காரியம்!

இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் தேர்தல் நடத்தக்கோரி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜூன் 30க்குள் தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு  ஜூன் 21ம் தேதி தேர்தலை நடத்துவது என தனி அலுவலர் மற்றும் தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள்  தொடங்கப்பட்டன. 

எனினும் தற்போது நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட ஜூன் 30 என்ற காலக்கெடுவை நீக்க கோரி தயாரிப்பாளர் சங்கம் சார்பில், உயர்நீதி மன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடித்திருக்க வேண்டும், அதுதொடர்பான அறிக்கையையும் அக்டோபர் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

 

இதையும் படிங்க: லட்சுமி மேனனுக்கு பதிலாக இந்த நடிகையா?... பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்க போகும் விஜய் சேதுபதி பட நாயகி...!

தற்போது வரை கொரோனா பிரச்சனைகள் நீடித்து வருவதால் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இதனால் தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 30ம் தேதியிலிருந்து நீட்டிக்கும் படி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தரப்பு மீண்டும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.டி ஆஷா, டிசம்பர் 31-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமெனவும், சிறப்பு அதிகாரியான ஒய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தேர்தலை நடத்தி முடித்தது குறித்த அறிக்கையை ஜனவரி 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்தார். 

click me!