எஸ்.பி.பி பெயரில் டப்பிங் ஸ்டூடியோ... ராதாரவி தலைமையில் தீர்மானம்..!

By Thiraviaraj RMFirst Published Sep 30, 2020, 6:14 PM IST
Highlights

எஸ்.பி.பி பெயரில் புதிய டப்பிங் ஸ்டூடியோ தொடங்க செயற்குழுவில் ராதாரவி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
 

எஸ்.பி.பி பெயரில் புதிய டப்பிங் ஸ்டூடியோ தொடங்க செயற்குழுவில் ராதாரவி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

இந்தியாவின் முன்னணி பாடகரான எஸ்.பி.பி கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்காக இந்திய திரையுலகமே பிரார்த்தனை செய்தபோதும் சிகிச்சை பலனளிக்காமல் கடந்தவாரம் காலமானார்.

எஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ தொடங்க நடிகர் ராதாரவி தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில் தீர்மானம் ட்நிறைவேற்றப்பட்டுள்ளது. டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினரான திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை கௌரவிக்கும் விதமாக, டப்பிங் யூனியனின் செயற்குழு குழு 30.09.2020 அன்று தலைவர் ராதாரவி தலைமையில் கூடி, திரு எஸ்பிபி அவர்களின் திருவுருவப் படம் திறந்துவைக்கப்பட்டது. டப்பிங் யூனியனுக்கென தனியே டப்பிங் ஸ்டுடியோ ஒன்று இசைத் துறைச் சாதனையாளரும் டப்பிங் கலைஞருமான எஸ்பிபி அவர்களின் நினைவாக விரைவில் திறக்கப்படும் என ராதாரவி தெரிவித்தார்.
 

click me!