சாவில் கூட நியாயம் இல்லை’...! அநியாயத்திற்காக பொங்கி எழுந்த கவின் ஆவேச ட்விட்..!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண் மனிஷா வால்மீகி. இவர் கடந்த 15 நாட்களுக்கு முன் சில கயவர்களால் பாலியல் வன்கொடுமை மற்றும் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தது குறித்து, கவின் சாவில் கூட நியாயம் இல்ல... என காட்டமாக ட்விட் செய்துள்ளார்.
 


உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண் மனிஷா வால்மீகி. இவர் கடந்த 15 நாட்களுக்கு முன் சில கயவர்களால் பாலியல் வன்கொடுமை மற்றும் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தது குறித்து, கவின் சாவில் கூட நியாயம் இல்ல... என காட்டமாக ட்விட் செய்துள்ளார்.

இந்தியாவில் நடக்கும் சில சம்பவங்கள்,  மனித தன்மையற்ற சில மிருகங்களும் வாழ்ந்து வருவதை நிரூபித்து வருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண் மனிஷா வாலமீகி செப்டம்பர் 14 ஆம் தேதி  நான்கு கொடூரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அது மட்டுமின்றி அவரது நாக்கு அறுத்து, முதுகெலும்பு, கழுத்து பகுதியை கடுமையாக தாக்கினார்கள் அந்த கயவர்கள்.  

Latest Videos

பல்வேறு காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனிஷா, சிகிச்சை பலன் இன்றி நேற்று செப்டம்பர் 29 ஆம் தேதி உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் சாதாரண மக்கள் என அனைவரும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து, மனிஷாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் குறித்து,  நீதிவிசாரணை செய்ய உபி முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் பிரபலமும், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலமுமான கவின், ஆவேசமாக 'சாவில் கூட நியாயம் இல்லை' என்று ட்விட் செய்துள்ளார்.

இவரின் ட்விட் இதோ... 

சாவுல கூட நியாயம் இல்ல.. pic.twitter.com/2OM4yrcAQa

— Kavin (@Kavin_m_0431)

click me!