
கொரோனா வைரஸ் ஊரடங்கில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை குவித்து வைத்திருக்கும் பெரிய மாஸ் ஹீரோக்கள் கூட பெயருக்கு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டு அமைதியாகி விட்டனர். ஆனால் திரையில் வில்லனாக தோன்றும் நடிகர் சோனு சூட், ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்கு ஏராளமான உதவிகள் செய்து ரியல்ஹீரோவாக வலம் வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் தவித்த ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த ஊருக்கு செல்ல, பஸ், பிளைட் போன்றவற்றை ஏற்பாடு கொடுத்தார். அதே போல் உணவின்றி கஷ்டப்பட்டு வந்த பலருக்கு சாப்பாடு கொடுத்தும் உதவினார்.
இதையும் படிங்க: நடந்தே கைலாசாவிற்கு போன கண்ணம்மா.... கையெடுத்து கும்பிட்டு வரவேற்ற நித்யானந்தா... வைரலாகும் மீம்ஸ்...!
அதுமட்டுமின்றி சோசியல் மீடியா மூலமாகவும் உதவி தேவைப்படுவோருக்கு தன்னால் ஆன பல விஷயங்களை செய்து கொடுக்கிறார். விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுவதற்கு காளை மாடுகளை வாடகைக்கு எடுக்க கூட பணம் இல்லாமல் இரண்டு மகள்களை ஏரில் பூட்டி உழுத நிலையில் அடுத்த நாளே அவருக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்தார். சாப்ட்வேர் இன்ஜினியர் பணியை இழந்து காய்கறி வியாபாரம் செய்த இளம்பெண்ணுக்கு அடுத்த நாளே சாப்ட்வேர் இன்ஜினியர் பணி வாங்கி கொடுத்தார்.
\
இதையும் படிங்க: ஆடையில்லாமல் போட்டோ ஷூட் நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்... வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி...!
ரஷ்யாவில் மருத்துவம் படித்து வந்த தமிழக மாணவர்கள் 900க்கும் மேற்பட்டோர் சொந்த ஊர் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தார். அதுமட்டுமின்றி சோசியல் மீடியாவில் தன்னிடம் உதவி கேட்கும் பலருக்கும் தன்னால் முடிந்தவற்றை உடனுக்குடன் செய்து கொடுக்கிறார். இப்படி தனது உதவிகளால் திணறடித்து வரும், சோனு சூட்டின் சேவையை பாராட்டி, ஐ.நா. மேம்பாட்டு திட்டத்தின் சிறப்பு மனிதநேய விருது வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக இருந்த விருது ஏஞ்சலினா ஜோலி, லியோனார்டோ டிகாப்ரியோ, பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.