பிரபல சீரியல் இயக்குநருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை... வாழ்க்கையையே புரட்டி போட்ட கொரோனா...!

By Kanimozhi PannerselvamFirst Published Sep 29, 2020, 7:43 PM IST
Highlights

அப்படித்தான் இந்தியில் பல புகழ்பெற்ற சீரியல்களை இயக்கி மக்கள் மனதில் இடம் பெற்ற இயக்குநர் ராம் விருக்ஷ கவுர் என்பவர் சாலையோரத்தில் காய்கறி தொடங்கி நடத்தி வருகிறார்.

கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு இதுவரை நீண்டு கொண்டே செல்கிறது. இடையில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டது. திரையுலகைப் பொறுத்த வரை கடந்த 6 மாதமாக ஷூட்டிங்குகள் நடக்காததால் பலரும் வேலை வாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். ஷூட்டிங்கிற்கு அனுமதி அளிக்கப்பட்ட போதும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அதிக எண்ணிக்கையிலான ஆட்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் தொடர்கிறது. 


வசதி படைத்தவர்களை தவிர்த்து, அன்றாடம் பிழைப்பை நம்பி நடித்து வரும் துணை நடிகர்கள், மற்றும் நடுத்தர வசதி படைத்த நடிகர்கள் அன்றாட செலவிற்கு கூட அல்லாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் வறுமையில் தவிக்கும் பலரும் தங்களது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக மாற்று தொழிலை செய்து வருகின்றனர். அன்றாட பிழைப்பிற்காக நம்பியிருந்த சினிமா தொழிலும் கைவிட, எவ்வித உதவியும் கிடைக்காமல் திண்டாடும்  சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட துணை நடிகர்கள் பலரும் காய்கறி, பழம், கருவாரு என வீதி வீதியாக சென்று விற்றுவருதை நாள்தோறும் பார்த்து வருகிறோம்.

அப்படித்தான் இந்தியில் பல புகழ்பெற்ற சீரியல்களை இயக்கி மக்கள் மனதில் இடம் பெற்ற இயக்குநர் ராம் விருக்ஷ கவுர் என்பவர் சாலையோரத்தில் காய்கறி தொடங்கி நடத்தி வருகிறார். சமீபத்தில் அவருடைய சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து புதிதாக வெள்ளித்திரையில் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் கொரோனா சூழ்நிலை காரணமாக தற்போது படத்தை எடுக்க முடியாது என்றும், ஓராண்டு சென்ற பிறகு பார்க்கலாம் எனவும்  தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறிவிட்டார்களாம். அதனால் வருமானத்திற்கு வழியின்றி தவித்த அவர் தற்போது காய்கறி கடை நடத்தி வருகிறார். 
 

click me!