’தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் அத்தனை பேரும் அனாதைகள்’...சொல்றதும் ஒரு பிரபல தயாரிப்பாளரேதான்...

By Muthurama LingamFirst Published May 5, 2019, 9:26 AM IST
Highlights


‘எங்கள் பிரச்சினைகளை யாரிடம் சொல்லி முறையிடுவது என்று கூட தெரியாமல் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் அவைவருமே அனாதைகளாக நிற்கிறோம்’ என்று சங்கத் தலைவர் விஷாலை வறுத்தெடுத்தார் பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா.

‘எங்கள் பிரச்சினைகளை யாரிடம் சொல்லி முறையிடுவது என்று கூட தெரியாமல் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் அவைவருமே அனாதைகளாக நிற்கிறோம்’ என்று சங்கத் தலைவர் விஷாலை வறுத்தெடுத்தார் பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா.

முத்துகுமரன் இயக்கத்தில் யோகி பாபு, ரமேஷ் திலக், ராதாரவி, `வத்திக்குச்சி' திலீபன், ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு நடித்துள்ள படம் `தர்மபிரபு' இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய  பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மீது அடுக்கடுக்கான புகார்கள் சொன்னார். அந்த விழாவில் பேசிய அவர், ”அரசுக்கும் டிக்கெட் புக்கிங்கிற்கும் சம்பந்தமில்லை, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் பொறுப்பற்று நடப்பதால் தான் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது. விரைவில்  இந்த நிலைமைகள் மாறும். அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. கோரிக்கை விடுத்தாலே போதும். அப்படி கேட்கக்கூடிய தலைமை நம்மிடம் இல்லை.

யாரை அழைத்துக் கொண்டு பேசுவது என்று தெரியாமல் தயாரிப்பாளர்கள் அனாதையாக நிற்கிறோம். கேட்பதற்கு ஆள் இல்லை. இந்த நிலைமை இன்னும் மூன்று, நான்கு மாதங்களில் மாறும், எதையும் முயற்சி செய்யாத அமைப்பு, எதைப்பற்றியும் கவலைப்படாத ஒரு தலைவர். என் குழந்தைகளுக்கு என்ன பிரச்சனை என்பது எனக்கு தான் தெரியும். தயாரிப்பையே தொழிலாக கொண்டுள்ள ஒருவர் தான் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தலைவராக இருக்க வேண்டும். படம் தயாரிக்கும் அனைவரும் தயாரிப்பாளர் இல்லை. தன்னை நடிக்க வைத்து தானே தயாரிப்பவர்கள், தயாரிப்பாளர்கள் என்று முழுமையாக சொல்லிக் கொள்ள கூடாது. அப்படி ஒருவர் இருப்பது தான் இங்குள்ள பிரச்சனைக்கு எல்லாம் காரணம். தமிழ் ராக்கர்ஸை 6 மாதங்களில் ஒழிப்பேன் என்று சொன்னவர்களை எல்லாம் காணோம்” என்று அதிரடியாக விஷாலை எதிர்த்துப் பேசினார்.

click me!