பாத்ரூமில் வழுக்கி விழுந்த பின்னணி பாடகி எஸ்.ஜானகி !! இடுப்பு எலும்பு முறிவு !!

Published : May 05, 2019, 07:00 AM IST
பாத்ரூமில் வழுக்கி விழுந்த பின்னணி பாடகி எஸ்.ஜானகி !! இடுப்பு எலும்பு முறிவு !!

சுருக்கம்

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி உறவினர் திருமணத்துக்காக மைசூர் சென்றிருந்த போது குளியல் அறையில் வழுக்கி விழுந்ததில் அவரது இடுப்பு எழும்பு முறிந்தது. இதையடுத்து அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ளார்.

எஸ். ஜானகி இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்படப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருது  பெற்றுள்ளார்.

சென்னையில் தனது மகனுடன் வசித்து வரும் திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி, சில நாள்களுக்கு முன்பு மைசூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வருகை தந்திருந்தார். 4 நாள்களுக்கு முன்பு வீட்டில் கால் இடறி கீழே விழுந்ததில் எஸ்.ஜானகியின் இடுப்பு எலும்பு முறிந்தது. 

இதைத்தொடர்ந்து, மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.ஜானகி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். இடுப்பு எலும்பு முறிவை சரி செய்ய எஸ்.ஜானகிக்கு அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து நேற்று வீடு திரும்பினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஜானகி , கர்நாடக மக்கள் என் மீது எப்போதும் அன்பைப் பொழிந்து வருகிறார்கள். அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் நலமாக இருக்கிறேன். எனக்கு மைசூரு நகரை எப்போதும் பிடிக்கும். இந்நகரில் ஓய்வெடுக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.


.
தொடர்ந்து பேசிய அவர், உறவினர் வீட்டில் நான் கால் இடறி விழுந்துவிட்டேன். இதில் என் இடுப்பு எலும்பு முறிந்தது. அதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!