
1949-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிறந்த ராஜேஷ், ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1974-ம் ஆண்டு ‘அவள் ஒரு தொடர்கதை’ என்கிற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு ராஜேஷுக்கு கிடைத்தது. பின்னர் 1979-ம் ஆண்டு வெளிவந்த ‘கன்னிப்பருவத்திலே’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். கமலஹாசனுடன் இணைந்து சத்யா, மகாநதி, விருமாண்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் பிறப்பால் கிறிஸ்தவராக இருந்த போதும் பெரியாரின் சித்தாந்தங்களில் தீவிரமாக இருந்தார். பின்னர் சோதிடம் குறித்த பல புத்தகங்களையும், கட்டுரைகளையும் எழுதி உள்ளார். ஆங்கிலத் திரைப்பட நடிகர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் தமிழில் எழுதியுள்ளார். 1987 முதல் 1991 வரை எம்.ஜி.ஆர் மனைவி ஜானகியை ஆதரித்து தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தார்.
உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ராஜேஷ் காலமானார்
வெள்ளித்திரை மட்டுமில்லாது சின்னத்திரையிலும் நடித்து வந்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ தொடரில் முக்கிய கதாபாரத்திரத்தில் நடித்து வந்தார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் பயணித்து வந்த ராஜேஷ், உடல் நலக்குறைவு காரணமாக இன்று (மே 29) காலமாகி உள்ளார். மூச்சுத் திணறல் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருடைய மரணம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.