
Mani Ratnam Next Movie : புகழ்பெற்ற இயக்குனரான மணிரத்னம், தற்போது தக் லைஃப் திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார். 'தக் லைஃப்' படத்தில் கமல்ஹாசனுடன் திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க, ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், மணிரத்னத்தில் அடுத்த படம் குறித்த தகவல் கடந்த சில நாட்களாக இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வந்தது. அதன்படி மணிரத்னம் தனது வழக்கமான தீவிரமான கதைக்களங்களில் இருந்து விலகி, தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி மற்றும் நடிகை சாய் பல்லவி கூட்டணியில் ஒரு காதல் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. இந்தச் செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் இதுபற்றிய உண்மையை போட்டுடைத்துள்ளது. அதன்படி நவீன் பாலிஷெட்டி மற்றும் சாய் பல்லவியுடன் இணைந்து காதல் படம் ஒன்றை இயக்குவார் என்ற வதந்திகளை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. தற்போது, மணிரத்னம் கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைஃப்' படத்தின் இயக்கத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தின் பணிகளே அவருக்கு முன்னுரிமையாக உள்ளது. வேறு எந்தப் புதிய படத்தையும் அவர் தற்போது பரிசீலிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நவீன் பாலிஷெட்டி மற்றும் சாய் பல்லவியுடன் படம் குறித்த செய்தி வெறும் வதந்தி என்றும், எதிர்காலத்தில் புதிய படம் குறித்த அறிவிப்புகள் மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் ஏற்கனவே 'மௌன ராகம்', 'ரோஜா', 'பம்பாய்', 'அலைபாயுதே', 'ஓ காதல் கண்மணி' போன்ற பல வெற்றிகரமான காதல் படங்களை இயக்கியுள்ளதால், அவரிடமிருந்து இன்னொரு காதல் படத்தை எதிர்பார்ப்பது இயல்பே. நவீன் பாலிஷெட்டி மற்றும் சாய் பல்லவி போன்ற இளம் திறமையாளர்களுடன் மணிரத்னம் இணைவார் என்ற எதிர்பார்ப்பே இந்த வதந்திக்குக் காரணமாக இருக்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.