IPL 2023: பிரமாண்ட துவங்க விழாவை நடனத்தால் களைகட்ட வைக்க போகும் தமன்னா - ராஷ்மிகா!

Published : Mar 31, 2023, 09:32 AM ISTUpdated : Mar 31, 2023, 09:34 AM IST
IPL 2023: பிரமாண்ட துவங்க விழாவை நடனத்தால் களைகட்ட வைக்க போகும்  தமன்னா - ராஷ்மிகா!

சுருக்கம்

இந்தியன் பிரீமியர் லீக், அதாவது IPL தொடக்க விழாவில் நடிகை தமன்னா மற்றும் ராஷ்மிகா இணைந்து நடனம் நடனம் ஆடி கிரிக்கெட் போட்டியை களைகட்ட வைக்க உள்ளனர்.  

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கார்த்திக்கொண்டிருக்கும் IPL போட்டிகள், (மார்ச் 31) அதாவது இன்று மாலை 6 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள, நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்...  இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவே மிக பிரமாண்டமாக துவங்க உள்ளது. 

இந்த IPL கிரிக்கெட் போட்டியின் துவங்க விழாவில், பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாய் மாறிய,  தமன்னா பாத்தியா மற்றும் நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா  கலந்து கொண்டு, துவக்க விழாவை தன்னுடைய நடனத்தால் களைகட்ட வைக்க உள்ளதாக, அதிகார பூர்வ தகவல் வெளியாகி.. கிரிக்கெட் ரசிகர்களை மட்டும் அல்லது தமன்னா மற்றும் ராஷ்மிகா ரசிகர்களையும் இன்ப அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

பால் வண்ண மேனியை காட்டி பக்குனு ஆக்கிய வாணி போஜன்! கிக் ஏறிப்போய் வர்ணிக்க வார்த்தை தேடும் ரசிகர்கள்!

இதுகுறித்து இந்தியன் பிரீமியர் லீக்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மார்ச் 31, 2023 அன்று மாலை 6 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா மற்றும் ஜியோ சினிமா இணைந்து நடத்தும், பிரம்மாண்டமான TATA IPL தொடக்க விழாவில் தமன்னாவுடன் மிகப்பெரிய கிரிக்கெட் கொண்டாட்டத்தில் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த போட்டிகள் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான, நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகள் வயது நடிகையை மடக்கி போட்ட டாப் ஹீரோ! ரகசிய உறவுக்கு இதுவே ஆதாரம்? புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்

கொரோனா பெருந்தொடருக்கு பின்னர், இந்த முறை நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட பட்டுள்ளது. மேலும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ்  அணியும், நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில்  தமன்னாவுடன்...ராஷ்மிகா மந்தனாவும் இணைத்து நடனமாட உள்ளார். அதே போல் தொடக்க விழாவில் டைகர் ஷெராஃப், அரிஜித் சிங் மற்றும் கத்ரீனா கைஃப் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்