
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருவதால், மக்கள் எங்கும் வெளியில் செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளது.
மேலும், சின்னத்திரை படப்பிடிப்பு, வெள்ளிதிரை படப்பிடிப்பு, மற்றும் அணைத்து திரையரங்கங்களும் இழுத்து மூடப்பட்டுள்ளது. ஆங்காங்கு அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்குகிறது.
தடையை மீறி செயல்படும் கடைகள், மற்றும் அலுவலகங்கள் அதிரடியாக சீல் வைக்கப்பட்டு வருகிறது. சின்னத்திரை படப்பிடிப்புகள் நடைபெறாததால், பல முன்னணி சீரியல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மாறாக திரைப்படங்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் நாட்டு மக்களின் பொழுது போக்கிற்காக, இன்று முதல் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும் ராமாயணம் ஒளிபரப்பப்படும் என்று தூர்தர்ஷன் நேற்றே அறிவித்தது. இதுகுறித்த அறிவிப்பை நேற்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.
இன்று காலை 9 மணிக்கு ஒளிபரப்பான முதல் முதல் எபிசோடை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது.
அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய அனுபவத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில் ' குழந்தை பருவத்திற்கே சென்று விட்டேன். தூர்தஷனில் ஒளிபரப்பாகும் 'ராமாயணம்', 'மஹாபாரதத்தை' குடும்பத்துடன் அமர்ந்து பார்ப்போம். தொடர்த்து ஒவ்வொரு வாரமும் இது தான் எங்களுடைய வீக் எண்டு பிளான். திரும்பவும் மஹாபாரதம் ஒளிபரப்ப படுவது மகிழ்ச்சி இந்த கால குழந்தைகளும் இதை அறிந்து கொள்ள சிறந்த வாய்ப்பு என காஜல் தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.