“அவங்க தான் கட்டுறாங்க வரி... தலையில் ஏத்துறீங்க வலி”.... அடுக்குமொழியில் அரசுக்கு கோரிக்கை வைத்த டி.ராஜேந்தர்

By Kanimozhi PannerselvamFirst Published Jan 9, 2021, 1:53 PM IST
Highlights

இந்த சமயத்தில் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிரடி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

தமிழக தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற ஒற்றை அறிவிப்பு ஓட்டுமொத்த திரையுலகினரும், சினிமா ரசிகர்களும் உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால் கொரோனா காலத்தில் தியேட்டர்களில் 100 சதவீதம் பேரை அனுமதிப்பது ஆபத்து என கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசும் அந்த அறிவிப்பை திரும்ப பெறும் படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கிலும், பள்ளிகள் மூடியிருக்கும்போது தியேட்டர்களில் 100% ரசிகர்களை அனுமதிப்பது நல்லதல்ல என கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவுப்படி ஜனவரி 11 ஆம் தேதி வரை தியேட்டர்கள் 50% ரசிகர்கள் அனுமதியுடன்தான் இயங்கவேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 

இதற்கு முன்னதாக மத்திய அரசும் 100 சதவீத இருக்கைக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற அறிவுறுத்தியிருந்த நிலையில் நேற்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்த தமிழக அரசு, மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்தது. இதனால் மாஸ்டர் திரைப்படம் சொன்னபடி திரைக்கு வருமா?, அப்படி வந்தால் ஈஸ்வரன் திரைப்படத்தின் நிலை என்ன? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது. 

 

இதையும் படிங்க: ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்... முதல்வரிடம் இருந்து வந்த அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி....!

இந்த சமயத்தில் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிரடி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழ்நாட்டில் பல இடங்களில் பொழுதுபோக்கே இல்லை. சில இடங்களில் மட்டுமே கடற்கரை உள்ளது. கடற்கரையை விட்டால் மக்களுக்கு என்று இருக்கும் ஒரே பொழுது போக்குத்துறை சினிமாத்துறை. ஒரு சினிமா டிக்கெட் எடுத்தால் அவங்க தான் கட்ட வேண்டி இருக்கு வரி. அவங்க தலையில் ஏத்திக்கிட்டே இருக்கீங்க வலி. இந்த மக்களுக்காகவாவது தமிழக அரசின் கையில் உள்ள உள்ளாட்சித்துறை வரியை ரத்து செய்ய வேண்டும். பொங்கல் போனஸாக 8 சதவீத உள்ளாட்சி வரியை நீக்க வேண்டும், கலை உலகத்தினரின் கவலையை போக்க வேண்டும்... மக்களின் உணர்வை கட்டிக்காக்க வேண்டும் என அவருடைய பணியிலே கோரிக்கை விடுத்துள்ளார். இதோ அந்த வீடியோ... 

தமிழக அரசு உள்ளாட்சி வரி 8 % நீக்க வேண்டும். இயக்குனர், நடிகர் டி.ஆர் கோரிக்கை pic.twitter.com/dqGzAek1uU

— meenakshisundaram (@meenakshinews)
click me!