“இந்து மதத்தை விமர்சிக்க எவனுக்கும் அருகதை இல்ல”... காட்மேனுக்கு எதிராக கொதித்தெழுந்த எஸ்.வி.சேகர்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 6, 2020, 4:48 PM IST
Highlights

இந்நிலையில் ஆன்லைன் தளம் ஒன்றிற்கு பாஜக முக்கிய பிரமுகரான எஸ்.வி.சேகர் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் “காட்மேன்” தொடருக்கு பின்னால் உள்ள பல மர்மங்கள் குறித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். 

ஜெய் பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள “காட்மேன்” வெப் சீரிஸின் டீசர் கடந்த வாரம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கிய இந்த வெப் தொடரை ஜீ5 தனது ஆன்லைன் தளத்தில் ஜூன் 12ம் தேதி ஒளிபரப்பவிருந்தது. பிராமண சமூகத்தினர் குறித்து சர்ச்சை வசனங்கள், உச்சகட்ட ஆபாச காட்சிகள், இந்து கடவுள்கள் மீதான நம்பிக்கையை அவமதிப்பது போன்ற காட்சிகள் டீசரில் இடம் பெற்றிருந்ததால் சர்ச்சை வெடித்தது. 

அந்தணரை அவமதித்ததாகவும், இந்து மக்களின் மத நம்பிக்கையை புண்படுத்திவிட்டதாகவும் “காட்மேன்” தொடர் இயக்குநர், ஜீ5 நிர்வாகம் உள்ளிட்டோர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் இந்து மற்றும் பிராமண அமைப்பினர் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன. பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ள இந்த வெப் தொடரை தடை செய்ய வேண்டுமென ஜீ5 நிர்வாகத்திடமும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதை தொடர்ந்து, அந்த தனியார் தொலைக்காட்சியின் ஓடிடி தளத்தில் இருந்து, 'காட்மேன்' டீசர் அதிரடியாக நீக்கப்பட்டது. தொடர் சிக்கல் காரணமாக காட்மேன் தொடரை வெளியிடப்போவதில்லை என்று ஜீ5 நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. 

இதையும் படிங்க: 

இதற்கு முன்னதாக சர்ச்சைக்குரிய “காட்மேன்” வெப் தொடர் சாதி, மத பிரிவுகளுக்கு இடையே பகையை தூண்டுவதாகவும், அதில் நடித்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இயக்குநரும், நடிகருமான எஸ்.வி.சேகர் சென்னை காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். தற்போது “காட்மேன்” தொடர் நிறுத்தப்பட்டதற்கு எதிராகவும், ஆதரவாகவும் சோசியல் மீடியாவில் கருத்துக்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் ஆன்லைன் தளம் ஒன்றிற்கு பாஜக முக்கிய பிரமுகரான எஸ்.வி.சேகர் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் “காட்மேன்” தொடருக்கு பின்னால் உள்ள பல மர்மங்கள் குறித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். 

இதையும் படிங்க: 

“காட்மேன்” வெப்சீரிஸை இந்து மதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே நான் பார்க்கிறேன்.  அதில் இந்து மத சன்னியாசிகள் இடம் பெற்றுள்ளனர். இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கைகளை சிதைக்க கூடிய விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. வெப்சீரிஸுக்கு சென்சார் இல்லை என்பதற்காக தேவையற்ற பதற்றத்தையும், சமூக நல்லிணக்கத்தை கெடுக்க கூடிய விஷயமாகவே உள்ளது. இந்து மதத்தின் உட்பிரிவு தானே பிராமணர். பிராமணர்களை தாக்கினாலே இந்துக்களை தாக்கியது போல் ஆகாதா? என்று கேள்வி எழுப்பினார். இந்து மதத்தில் மட்டுமே ஒருவன் அவன் விரும்புகிற வகையில் எல்லாம் சாமி கும்பிட முடியும். அதை விமர்சிப்பதற்கு கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கோ, இந்து மதத்தில் இல்லாதவர்களுக்கோ அருகதை கிடையாது என பதிலளித்தார். 

இதையும் படிங்க: “காட்மேன்” டீசரில் அப்படி என்ன தப்பிருக்கு?... சர்ச்சை தொடருக்கு ஆதரவாக சீறும் திருமா...!

“காட்மேன்” வெப்சீரிஸ் மத சாயத்துடன் தான் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் அந்த தொடரின் தயாரிப்பாளர் இதற்கு முன்பு 3 ஆண்டுகள் ஜீசஸ் கால் அமைப்பில் வேலை பார்த்துள்ளார்.“காட்மேன்” வெப் தொடரை இயக்கியவரின் மனைவி ஒரு ‘கிறிஸ்துவர்’, இயக்குநரும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது. இந்த தொடரில் உதவி இயக்குநராக பணியாற்றிய ‘ராஜா’ என்பவருடைய முழுப் பெயர் ‘ராஜா முகமது’ இப்படிப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு படத்தை இயக்கும் போது சந்தேகம் வருவது இயல்பு தான் என்று பதிலளித்தார். எங்கள் வீட்டை கிளீன் செய்ய நீங்கள் ஏன் உள்ளே வரவேண்டும்... இந்து மதத்தை பற்றி எவன் வேணும்னாலும் பேசக்கூடாது. அதுக்கெல்லாம் எவனுக்கும் யோக்கிதையும் கிடையாது, அருகதையும் கிடையாது என்று சற்று கடுப்பாக பதிலளித்தார். 
 

click me!