
சென்னை கொடுங்கையூரில் முத்தமிழ் நகர் ஐந்தாவது பிளாக் 115வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கொடுங்கையூர் போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கையறையில் அழுகிய நிலையில் ஆண் சடலமும், மற்றொரு அறையில் பெண் சடலமும் கிடந்தது. இருவருக்கும் 45 வயதில் இருந்து 50 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் கர்ப்பம் தான்”... உண்மையை போட்டுடைத்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகை ஹேமா...!
இரண்டு சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அந்த வீட்டை முற்றிலும் சோதனை செய்த போலீசாருக்கு 2 அடையாள அட்டைகள் சிக்கின. சின்னத்திரை நடிகர் சங்கத்தினருக்கான அந்த அடையாள அட்டையின் மூலம் தற்கொலை செய்து கொண்டது ஸ்ரீதர், அவரது தங்கை ஜெய கல்யாணி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
இதையும் படிங்க: யுவனை மதம் மாற்றினேனா?... ஆதாரங்களை வெளியிட்டு அதிரடி காட்டிய இளையராஜா மருமகள்...!
இந்தியாவில் தனது கொடூர முகத்தை காட்டி வரும் கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பதற்காக ஐந்தாம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 60 பேரை வைத்து சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் பெரும்பாலான நடிகர், நடிகைகள் வேறு மாநிலத்தில் இருப்பதாலும், அரசின் கட்டுப்பாடுகளால் செலவு அதிகம் என்பதாலும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் பலரும் படப்பிடிப்பை தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “காட்மேன்” டீசரில் அப்படி என்ன தப்பிருக்கு?... சர்ச்சை தொடருக்கு ஆதரவாக சீறும் திருமா...!
படப்பிடிப்புகள் நடத்தப்படாததால் சின்னத்திரையை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். வறுமையில் வாடும் அவர்களுக்கு முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். இந்நிலையில் படப்பிடிப்புகள் ஏதுவும் நடக்காததால் வறுமையால் சின்னத்திரை நடிகர்களான அண்ணன், தங்கை இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.