தன்மானத்தை விற்ற நடிகர்கள்... மரியாதையை விஜயகாந்திடம் கத்துக்கோ... என கூறி விளாசிய எஸ்.வி.சேகர்..!

Asianet News Tamil  
Published : Jan 09, 2018, 07:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
தன்மானத்தை விற்ற நடிகர்கள்... மரியாதையை விஜயகாந்திடம் கத்துக்கோ... என கூறி விளாசிய எஸ்.வி.சேகர்..!

சுருக்கம்

sv sekar resign the nadigar sangam trusty designation

நடிகர் நாசர் தலைமையில் இயங்கி வரும் நடிகர் சங்கத்தில், டிரஸ்டி பொறுப்பு வகித்து வரும் நடிகர் எஸ்.வி.சேகர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததாக சமூக வலைதளத்தில் அறிவித்தார். இதை தொடர்ந்து தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் கூறி இருப்பதாவது.. நம்சங்க தேர்தல் முடிந்தபின் என்னை நடிகர் சங்க டிரஸ்டிக்களில் ஒருவனாக நியமித்து என்னுடைய அறிவுரை,ஆலோசனைகள்,வழி நடத்துதல் தேவை என கேட்டுக்கொண்டீர்கள். ஆனால் ஒரு வருடத்தில் பல மாற்றங்கள். கையெழுத்திடுவதற்கு மட்டும் டிரஸ்டி.


​ ​
என்ற நிலை வந்த போது நான் பல மெயில்கள் அனுப்பியதற்கு எந்த பதிலும் அளிக்காமல் எனக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினீர்கள். என் பதில் கடிதத்தில் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. குறிப்பாக நம் நடிகர் சங்கம் 5 கிரவுண்டு அளவில் 30 கோடி 
​ரூபாய் ​மதிப்புள்ள ரோடை ஆக்கிரமித்துள்ளதாக ​ ​வந்த புகரைப்பற்றி கேட்டபோது கூட அப்படி ஒன்றுமேயிலையென்று விஷாலும் கார்த்தியும் சொன்னார்கள். ஆனால் உடனடியாக வழக்கும் ஸ்டேயும் வந்தது. இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில்  அந்த 18 கிரவுண்டுக்கும் அந்த ரோடுக்கும் உரிமையாளர் என்ற ஆதாரம் நம்மிடம் உள்ளதா என் தெரியவில்லை. எதிர் தரப்பினர்  அங்கு ரோடு உள்ளது என  ஆதாரங்கள் காட்டியும் தீர்ப்பு நடிகர் சங்கத்திற்கு ஆதரவாக வந்துள்ளது. ஆனால் எதிர் தரப்பினர் உச்ச நீதி மன்றம் செல்வதாக அறிகிறேன். அங்கு தீர்ப்பு வேறு விதமாக வந்தால் நடிகர் ஸங்கம் இதுவரை செலவழித்த பணம் என்ன ஆகும்?. 


 அதே போல் சமீபத்தில் நடந்த மலேசிய காலை விழாவிலும் பல குளறுபடிகள்.பல கலைஞர்கள் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள் என தெரிந்து கொண்டேன் . குறிப்பாக இயக்குனர் சங்கதலைவர் விக்ரமன்,R சுந்தரர்ராஜன், பார்த்திபன் ,இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் போன்ற பலர். இதன் பெயர்தான் நிர்வாக கோளாறு. இப்படி அரை குறையாக செய்வதற்கு எதற்கு பார்க் ஹோட்டலில் இத்தனை நாட்கள் இவ்வளவு ரூம் போட்டு நம் டிரஸ்ட் பணம் செலவழிக்கப்படவேண்டும்.?

ரஜினி கமலுக்கு மரியாதை கொடுப்பதில் தவறில்லை ஆனால் அதே மரியாதையை அனைத்து மூத்த கலைஞனர்களுக்கும் கொடுக்கத் தெரிய வேண்டும். அதை  எப்படி என்று நம் முன்னாள் தலைவர் திரு.
விஜயகாந்த் அவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் திருந்த வாய்ப்பில்லை.
மலேசியாவில் பிட்சை எடுக்க வந்த தமிழ் நடிகர்கள் தலைப்பிட்டு வந்த பத்திரிகை பார்க்கவில்லையா?

இத்தனை பணம் மலேசிய தமிழர்கள் மூலம் சம்பாதிக்கும் நாம் நலிந்த மலேசிய தமிழ்  குழந்தைகள் கல்விக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் குறைந்து போய் விடுவோமா?

பணம் தேவைதான் ,அது சுய மரியாதையை விற்று ச​ம்​பாதிப்பதை  என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

நம் நடிகர் சங்க மூத்த நாடகக்கலைஞர்கள் சிலரை அழைத்துக் சென்று அரிச்சந்திர மயானகாண்டம் காட்சி

நடித்திருந்தால்(15 நிமிடம் மட்டுமே வரும் ) அது நீங்கள் நாடக கலைஞர்களை உண்மையாக நேசிக்கிறீர்கள் ஓட்டுக்காக அல்ல என்றாவது தெரிந்து இருக்கும். அதையும் செய்யவில்லை​. ​ 

ஆகவே என் மனசாஷிக்கு எதிராக நம் சங்கத்தின் பக்கம் ஏற்படும்  தவறுகளுக்கு  நான் உடன்பட முடியாது என்பதாலும் டிரஸ்டி என்ற பதவி நடிகர் சங்கத்தை பொருத்த வரையில் ஒரு அலங்காரப்பதவியாக கருதப்படுவதாலும்,மற்ற சகா கலைஞர்களுக்கு உங்களால் ஏற்பட்ட அவமரியாதைக்காகவும் ​ எனக்களிக்கப்பட்ட டிரஸ்டி பதவியை ராஜினாமா செய்கிறேன். 
இதுவரை என் இமெயிலில் குறிப்பிட்ட பதில் இல்லா கேள்விகளுக்காகவும்,என் ஒப்புதல் 
இல்லாத செயல்பாட்​டு​களுக்கு​ம் .


​ ​நான் பொறுப்பாக மாட்டேன் என்பதையும் இக்கடிதம் மூலம் உறுதி செய்கிறேன்.
​என் கடிதத்தின் மூலம் ரோசப்பட்டு ​நீங்கள் அனைவரும் ராஜினாமா செய்தாலும் நம் சங்க கட்டிடம் கட்டப்படும். 
அடுத்தமுறை வரும் தேர்தலில் 
நீங்கள் யாரும் ஜெயிக்கவும்  முடியாது என கூறிக்கொள்கிறேன்.​
இவ்வுலகில் யாரும் நிரந்தரமில்லை என்பதை காலமும் அனுபவமும் உங்களுக்கு உணர்த்தும்.
பொது வாழ்வில் எவ்வளவு நேர்மையாக வாழ வேண்டும் என்று நம் மூத்த கலைஞர் திரு சிவகுமார் அவர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள். என்று கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் ஜெயிலுக்கு போகும் அறிவுக்கரசி.... பாசத்தால் அடிக்கும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
BIGBOSS: "அந்த விருதைத் தொடக்கூட எனக்குத் தகுதியில்லையா?" - பிக் பாஸ் 9 மகுடம் சூடிய திவ்யா கணேஷ் உருக்கம்!