பொங்கல் ரிலீசில் இருந்து விலகியது கலகலப்பு..!

 
Published : Jan 09, 2018, 06:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
பொங்கல் ரிலீசில் இருந்து விலகியது கலகலப்பு..!

சுருக்கம்

kalakalppu movie not relese in pongal

வருகிற பொங்கலன்று வெளியாகவிருந்த கலகலப்பு 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சுந்தர் சியின் திரைப்பட வாழ்க்கையில் 25வது படமாக வெளிவந்த கலகலப்பு, கடந்த 2012 ம் ஆண்டு திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது.  இதில் விமல், சிவா, ஓவியா, அஞ்சலி  ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக உருவான இத்திரைப்படம் வெளியாகி, சூப்பர் ஹிட் ஆனது.



கலகலப்பு வெற்றியை தொடர்ந்து  அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டார் சுந்தர் சி.  அதன்படி  இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவா மட்டும் நடித்துள்ளார். மற்றபடி ஜீவா, ஜெய், கேத்ரின் தெரசா, நிக்கி கல்ரானி, ரோபோ ஷங்கர், வையாபுரி  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தப் படம் பொங்கலன்று ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.  ஆனால், அன்று விக்ரமின் "ஸ்கெட்ச்", சூர்யாவின் "தானா சேர்ந்த கூட்டம்", பிரபுதேவாவின் "குலேபகாவலி" போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆவதால் கலகலப்பு 2 விற்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. 



எனவே வருகிற குடியரசு தினத்தன்று படத்தை ரிலீஸ் செய்ய போவதாக அறிவித்துள்ளனர். அன்றைய தினம் ஜெயம் ரவியின்" டிக் டிக் டிக்" , அனுஷ்கா வின் "பாகமதி",  விஷாலின் "இரும்புத்திரை", உதயநிதி ஸ்டாலினின் "நிமிர் "படங்களும் திரைக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?