Suseenthiran Talk About Vennila Kabadi Kuzhu Story : என்னுடைய வாழ்க்கையில் நடந்த கதை தான் வெண்ணிலா கபடி குழு என்று இயக்குநர் சுசீந்திரன் கூறியிருக்கிறார்.
Suseenthiran Talk About Vennila Kabadi Kuzhu Story : தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் சுசீந்திரன். வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக இயக்குராக அவதாரம் எடுத்தார். நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், ஜீனியஸ், கென்னடி கிளப், ஈஸ்வரன், குற்றம் குற்றமே உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். இயக்குநாரக மட்டுமின்றி ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்தார். நாம், தீபாவளி, சுட்டு பிடிக்க உத்தரவு, மார்கழி திங்கள் போன்ற படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
உயிர், உலக் தூங்கும் போது காதில் நயன்தாரா சொல்லும் ரகசியம் என்ன? குழந்தையை எப்படி வளர்க்கணும்?
undefined
இந்த நிலையில் வெண்ணிலா கபடி குழு படம் பற்றி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் என்ன கூறியிருக்கிறார் என்று பார்க்கலாம். வெண்ணிலா கபடி குழு, கென்னடி கிளப், ஜீவா, வெண்ணிலா கபடி குழு 2 போன்ற விளையாட்டு தொடர்பான கதைகளை நான் இயக்கி இருக்கிறேன். எனக்கு மற்ற விளையாட்டுகளை விட கபடி ரொம்பவே பிடிக்கும். என்னுடைய வீட்டில் அப்பா, அண்ணன் என்று எல்லோரும் கபடி வீரர்கள். அதனால் என்னுடைய படங்களில் கபடிக்கு முக்கியத்துவம் இருந்தது. அதுமட்டுமின்றி விளையாட்டையும் தாண்டி காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எப்படி கொடுத்து எடுக்கப்பட்ட படம் தான் வெண்ணிலா கபடி குழு. இந்த படத்தின் வரும் திருவிழா சீன் கூட என்னுடைய வாழ்க்கையில் நடந்தது. இப்படி என்னை சுற்றி நடைபெற்ற பல சம்பவங்களைத் தான் நான் படமாக கொடுத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். கடைசியாக 2கே லவ் ஸ்டோரி என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு கத்துக்கிட்டு நான் என்ன பண்ண போறேன்னு சொல்லிட்டேன் - நடிகர் ஜீவா!
திண்டுக்கல், பழநி அருகிலுள்ள அமரபூண்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இயக்குநர் சுசீந்திரன். திரைப்படங்கள் மீதான காதல் காரணமாக சினிமாவில் அறிமுகமானார். சுசீந்திரனுக்கு முன்னதாக அவருடைய அப்பா மற்றும் மாமா ஆகியோர் சினிமா துறையில் இருந்தனர். அதுவும் இயக்குநராக இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், ஒரு படத்தை கூட இயக்கவில்லை. இதன் காரணமாக, சுசீந்திரனும் இயக்குநராக வருவது அவரது குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. ஆனால், ஒரு நாள் எப்படியும் இயக்குநராக அவதாரம் எடுப்பேன் என்ற நம்பிக்கையில் சென்னைக்கு வந்தார்.
சுசீந்திரன் 18 வயதாக இருந்த போது முதல் படத்திற்கு அவருக்கு 12 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது. ஆரம்ப காலகட்டங்களில் அசிஸ்டண்ட் இயக்குநராக இருந்துள்ளார். இயக்குநர் எழில்மாறன் மற்றும் சபாபதி தக்ஷிணாமூர்த்தி ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் சுசீந்திரனுக்கு பேரும் புகழும் எப்படி வெண்ணிலா கபடி குழு கொடுத்ததோ அதே போன்று சூரிக்கு நல்ல அடையாளத்தையும் இந்தப் படம் கொடுத்தது. இந்த படத்தின் மூலமாக பரோட்டா சூரியாக அறியப்பட்டார். படத்தில் 50 பரோட்டா சாப்பிட்ட சூரியிடம் எத்தனை பரோட்டா சாப்பிட்டீர்கள் என்று இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் விடுதலை பார்ட் 2 பட புரோமோஷன் நிகழ்ச்சியில் கேட்டார். அதற்கு சூரி 13 புரோட்டா மட்டுமே சாப்பிட்டதாக கூறினார். அந்த சீசனுக்காக நான் காலை முதல் சாப்பிடவே இல்லை என்றும் கூறினார்.