Hemalatha Latest: சூர்ய வம்சம் ஹேமாவுக்கு என்ன ஆச்சு தெரியுமா..? இணையத்தில் வைரலாகும் போஸ்ட்..

By Anu Kan  |  First Published Mar 24, 2022, 10:49 AM IST

Hemalatha latest: சூர்யவம்சம், படத்தில் சுட்டி தனத்தோடு குழந்தை நச்சத்திரமாக நடித்து பிரபலம் அடைந்தவர் ஹேமா.இவர், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எளிமையான போஸ்ட் போடுகிறார்.



சூர்யவம்சம், படத்தில் சுட்டி தனத்தோடு குழந்தை நச்சத்திரமாக நடித்து பிரபலம் அடைந்தவர் ஹேமா. அந்தப்படத்தில், அவை பேசிய வசனங்கள் அனைத்தும் இன்று வரை மீம்ஸ்களில் பேமஸ். 

வெள்ளித்திரை பயணம்:

Tap to resize

Latest Videos

சூர்யவம்சம், படத்தில் ஹிட் அடித்ததை தொடர்ந்து, பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூமகள் ஊர்வலம், அன்பே அன்பே, காதல் கொண்டேன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் கலக்கி உள்ளார். 

சின்னத்திரை பயணம்:

இதையடுத்து, சின்னத்திரையில் ஹேமாவிற்கு 1999-ம் ஆண்டு சிறு வயது காவேரி கதாபாத்திரத்தில் நடித்த சித்தி தொடர் அவருக்கு சிறப்பான வரவேற்பை தந்தது. மேலும், கனாக்காணும் காலங்கள், தென்றல், போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். 

அதிலும் குறிப்பாக கனா காணும் காலங்கள் சீரியல் ஹேமாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இவர் கனா காணும் காலங்கள் சீரியலில் ராகவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் முக்கிய இடம் பிடித்தவர். 

கனா காணும் காலங்கள், பள்ளி பருவ குறும்புகள்,  நட்பு, காதல் என பலவிஷயங்களை மையமான வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடருக்கு 90’ஸ் கிட்ஸ் மத்தியில் பேவரைட் சீரியலாக பார்க்கப்பட்டது.

இவருக்கு என்னாச்சு? நெட்டிசன்கள் கேள்வி

கடைசியாக இவர் 2015 ஆண்டு ஒளிபரப்பான முந்தானை முடிச்சி சீரியலில் நடித்தார் அதன் பின்னர் எந்த சீரியலிலும் நடிக்க வில்லை. நீண்ட காலமாக சீரியலில் இருந்து விலகி இருக்கும் இவர், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எளிமையான போஸ்ட் போடுகிறார். அதில், விரைவில், சீரியலில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதை பார்த்து நெட்டிசன்கள் பலர், இவருக்கு என்னாச்சு? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க...Bhagyaraj-Aishwarya: 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ஜோடி...! அட.. ஹீரோ யார் தெரியுமா..?

click me!