
தமிழ் சினிமாவில் உள்ள உச்சகட்ட நடிகர்களின் ஒருவர் நடிகர் சூர்யா. வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு அறிமுகமாகி இருந்தாலும், பல்வேறு போராட்டங்களை கடந்து, தன்னுடைய விடா முயற்சியால் நடிப்பில் சாதித்தவர்.
நடிப்பையும் தாண்டி, படிக்க கஷ்டப்பட்டு வரும் பல குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் தன்னுடைய அகரம் என்கிற அமைப்பின் மூலம் படிக்க வைத்து வருகிறார். இவரின் நல்ல மதனை பார்த்தே இவருக்கு ரசிகராக மாறியவர்கள் பலர் உள்ளனர்.
தற்போது இவர் 'NGK ' , 'காப்பான்' என, இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இவ்விரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து, ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சீக்யா எண்டர்டெயின்மெண்ட், குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்க உள்ளனர்.
இந்த படத்திற்காக தன்னுடைய முழு கெட்டப்பை மாற்றி, முன்னணி நடிகர்கள் போடுவதற்கு தயங்கும் வழுக்கை தலை கெட்டப்பில் நடிக்க உள்ளாராம். இதனை கேட்டதும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தாலும், தொடர்ந்து தங்களுடைய பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
ஏற்கனவே பல படங்களுக்கு உடல் எடையை ஏற்றி, இறக்கி நடித்துள்ள சூர்யா தற்போது தன்னுடைய தோற்றத்தையும் மாற்றி நடிக்க உள்ளார். இந்த படத்தின் கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.