தேர்தல் பறக்கும் படையால் நடிகர் தனுஷுக்கு வந்த சோதனை!

By manimegalai aFirst Published Apr 10, 2019, 1:19 PM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்ட மன்ற தேர்தல் வருவதால், பறக்கும் படையினர் அனைத்து வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ரசீது இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணத்தை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் நடக்கிறது.
 

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்ட மன்ற தேர்தல் வருவதால், பறக்கும் படையினர் அனைத்து வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ரசீது இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணத்தை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் நடக்கிறது.

இதுபோன்ற பண கட்டுப்பாடுகளால், நடிகர் தனுஷ் நடித்து வந்த இரண்டு படங்கள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தனுஷ் தற்போது, இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் 'அசுரன்' மற்றும் கொடி படத்தின் இயக்குனர் துறை செந்தில் குமார் இயக்கத்தில் பெயரிடாத படத்திலும் நடித்து வருகிறார்.

விறுவிறுப்பான கதை களத்தில் எடுக்கப்பட்டு வரும் 'அசுரன்' படப்பிடிப்பிற்காக, படக்குழுவினர் கோவில் பட்டியில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்துவதற்காக சென்றனர். 

ஆனால் அங்கு ஒரு சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பை நடத்திவிட்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். இது குறித்து விசாரித்தபோது, படப்பிடிப்பிற்காக தினமும் 5 லட்சம் வரை எடுத்து செல்ல வேண்டி உள்ளதாகவும். தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபடும் போது, ஒவ்வொரு முறையும் விளக்கம் கூறி பணத்தை எடுத்து செய்வதால் பல சிரமங்கள் ஏற்படுகிறது இதனை தவிர்ப்பதற்காகவே தேர்தலுக்கு பின் படப்பிடிப்பை வைத்து கொள்ளலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல் தனுஷ் - சினேகாவை வைத்து துறை செந்தில் குமார் இயக்கி வரும் படத்திற்கும், இதே போன்ற இடைஞ்சல்கள் இருந்ததால், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

நடிகர் தனுஷ் படம் மட்டும் இன்றி, பல சிறு பட்ஜெட் படங்களும்... இது போன்ற சிரமங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

click me!