தளபதி 63 -ல் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை! யார் தெரியுமா?

Published : Apr 10, 2019, 12:39 PM IST
தளபதி 63 -ல் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை! யார் தெரியுமா?

சுருக்கம்

தளபதி விஜயின் 63 ஆவது படப்பிடிப்பு தற்போது படு வேகமாக நடைபெற்று வருகிறது.  இந்த படத்தில் நடிகை நயன்தாராவை தொடர்ந்து மற்றொரு முன்னணி நடிகையும் நடித்து வருகிறாராம். அவர் யார் என்கிற தகவல் முதல் முறையாக வெளியாகியுள்ளது.  

தளபதி விஜயின் 63 ஆவது படப்பிடிப்பு தற்போது படு வேகமாக நடைபெற்று வருகிறது.  இந்த படத்தில் நடிகை நயன்தாராவை தொடர்ந்து மற்றொரு முன்னணி நடிகையும் நடித்து வருகிறாராம். அவர் யார் என்கிற தகவல் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் 63 ஆவது படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி உள்ளது. ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' , 'மெர்சல்' ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால்,  இந்த படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

மேலும் இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக, பல ஆண்டுகளுக்கு பின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். ஏற்கனவே விஜய் நயன்தாரா காம்பினேஷனில் வெளியான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

அதிலும், இப்படத்தில் இதுவரை ஏற்று நடித்திராத கால் பந்து பயிற்சியாளர் வேடத்தில் விஜய் நடித்துள்ளார். இவருடன் நடிகர் கதிர், யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்கிற தகவல் ஏற்கனவே வெளியானது.

இவர்களை தொடர்ந்து, 'மேயாத மான் ' படத்தில் வைபவ்விற்கு தங்கையாக நடித்து, எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்ட நடிகை இந்துஜா, மற்றொரு நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் நடிகர் கதிருக்கு ஜோடியாக நடிக்கலாம் என கூறப்பட்டாலும், இது குறித்து அதிகார பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எடுப்பாக தெரிய... மார்பகத்தில் பேட் வைக்க சொல்வார்கள் - கசப்பான அனுபவத்தை பகிர்ந்த ராதிகா ஆப்தே
ஜனநாயகன் vs பராசக்தி : நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்..? சினிமாவிலும் விஜய்க்கு எதிராக நடக்கும் பாலிடிக்ஸ்