கார்த்தி, ஜோதிகாவை நினைத்து பெருமைப்பட்ட சூர்யா... தம்பி ஆடியோ ரிலீஸ் விழாவில் வெளியான சுவாரஸ்ய தகவல்...!

Published : Nov 30, 2019, 04:52 PM IST
கார்த்தி, ஜோதிகாவை நினைத்து பெருமைப்பட்ட சூர்யா... தம்பி ஆடியோ ரிலீஸ் விழாவில்  வெளியான சுவாரஸ்ய தகவல்...!

சுருக்கம்

இந்த விழாவில் பேசிய சூர்யா, ஜோதிகா, கார்த்தி நடிப்பை பற்றி புகழ்ந்து பேசினார். என்னால் கிளிசரின் போடாமல் அழுது நடிக்க முடியாது, ஆனால் இந்த படத்தில் ஒரு காட்சியில் கார்த்தி ரியலாக அழுது நடித்துள்ளார். என்னால நந்தா படத்தில் மட்டும் தான் அதை செய்ய முடிந்தது என கார்த்தியை பாராட்டினார். 

"கைதி" படத்தை தொடர்ந்து, கார்த்தி, ஜோதிகா அக்கா, தம்பியாக நடித்துள்ள படம் "தம்பி". தமிழில் 'பாபநாசம்' என்ற ஹிட் படத்தின் தடம்பதித்த பிரபல மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் அடுத்த படைப்பாக இந்தப் படம் உருவாகியுள்ளது. குடும்ப உறவு, பாசம், காதல் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் தம்பியாக கார்த்தியும், அக்காவாக ஜோதிகாவும் நடித்துள்ளனர். இவர்களுக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்துள்ளார். கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, '96' புகழ் கோவிந்த் வத்சவா இசையமைத்துள்ளார். 

"தம்பி" படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்றது. இதில் கார்த்தி, சூர்யா, ஜோதிகா, சத்யராஜ், 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய சூர்யா, ஜோதிகா, கார்த்தி நடிப்பை பற்றி புகழ்ந்து பேசினார். என்னால் கிளிசரின் போடாமல் அழுது நடிக்க முடியாது, ஆனால் இந்த படத்தில் ஒரு காட்சியில் கார்த்தி ரியலாக அழுது நடித்துள்ளார். என்னால நந்தா படத்தில் மட்டும் தான் அதை செய்ய முடிந்தது என கார்த்தியை பாராட்டினார். 

மேலும் பாகுபலி அளவிற்கு பிரம்மாண்டமாக "பாபநாசம்" படத்தை கொடுத்த ஜீத்து ஜோசப், "தம்பி" படத்தை இயக்கியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், படம் ரொம்ப அழகாக வந்திருப்பதாகவும் இயக்குநருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். படம் ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே பாசிட்டிவ் கமெண்ட்டுகள் வந்து கொண்டிருப்பதாக சூர்யா பெருமிதத்துடன் தெரிவித்தார். தொடர்ந்து மனைவி ஜோதிகாவைப் பற்றி பேசிய சூர்யா, ஜோவின் திறமையான நடிப்பை பதிவு செய்தார். விழாவில் சூர்யா, ஜோதிகா இருவரும் ஒருவரையொருவர் புன்னை பொங்க பார்த்துக் கொள்ளும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!