
சமீபத்தில் வெளியான சூர்யாவின் ஜெய் பீம் நல்ல வெற்றியை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படம் 'எதற்கும் துணிந்தவன்'. வரிசையாக ரஜினியின் அண்ணாத்த, விஜயின் பீஸ்ட் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பை தன் கையிலெடுத்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தையும் தயாரித்து வருகிறது. இதற்கு இசையமைப்பாளராக இமான் பணிபுரிந்து வருகிறார். சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
மண் மனம் மாறாத கிராமத்து கதைகளை நகைச்சுவை தளும்ப கொடுக்கும் பாண்டிராஜனின் புதிய படைப்பான "எதற்கும் துணிந்தவன்" ஆக்சன் கலவையாக உருவாகிறது என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதோடு திரையரங்கு திருவிழாவாக இந்த படம் இருக்கும் என சமீபத்தில் நடிகர் சூரி தெரிவித்திருந்தார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது சென்னையில் பிரபல படப்பிடிப்பு தளத்தில் பாடல் ஒன்றை படக்குழு படமாக்கி வருகிறது.
இதற்கிடையே உண்மை சம்பவம் சார்ந்த ஜெய் பீம் படம் பலரது விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. சமூகம் சார்ந்த சித்தரிப்பு என முக்கிய அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படமான எதற்கும் துணிந்தவன் கதையும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்படுவதாக சொல்லப்பப்படுகிறது. பொதுவாக சூர்யவின் 2டி தயரிப்பில் உருவாகும் படங்கள் உண்மை சம்பவம் சார்ந்த கதைக்களமாகவே பெரும்பாலும் உள்ளது. அதோடு பெண்களுக்கு முக்கியத்துவம் சார்ந்த கதைகளாகவும் இருக்கும். இவ்வாறு இருக்க சூர்யா சமீப காலமாக தான் நடிக்கும் படங்களின் கதைகள் உண்மை சம்பவமாக இருப்பதை உறுதி செய்யும் விதத்தில் தேர்வு செய்வதாக தெரிகிறது. இவர் நடித்து தயாரித்திருந்த சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் மக்கள் மத்தியில் பேசப்படும் படமாக மாறியுள்ளது. இந்த வரிசையில் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் தமிழகத்தை உலுக்கிய பொள்ளாட்சி பாலியல் வழக்கு தொடர்பான கதை என தகவல் பரவி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.