வாவ் சூப்பர்...உழவர்களுக்கு விருது வழங்கும் சூர்யா, கார்த்தி.. மரத்திடம் பேசினார்களா!

Kanmani P   | Asianet News
Published : Mar 05, 2022, 06:12 PM ISTUpdated : Mar 05, 2022, 06:13 PM IST
வாவ் சூப்பர்...உழவர்களுக்கு விருது வழங்கும் சூர்யா, கார்த்தி.. மரத்திடம் பேசினார்களா!

சுருக்கம்

அகரம் பவுண்டேஷன் துவங்கி 18 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. கிட்டத்தட்ட 5000 மாணவர்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர் என சூர்யா தெரிவித்துள்ளார்...

பிரபல பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தில் அனைவரும் திரை பிரபலங்களாக ஜொலித்து வருகின்றனர். அதோடு சூர்யா, கார்த்தி இருவருமே தனித்தனியாக தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகின்ன்றன. அதோடு நடிகர் சூர்யா தனது குடும்பத்தின் உதவியுடன் அகரம் பவுண்டேசன் என்னும் பெயரில் கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறார்..இந்த அறக்கட்டளை மூலம் ஏழை கிராமப்புற மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான கல்வி உதவிகளை செய்து வருகிறார்.

அண்ணனின் அகரம் ஃபவுண்டேஷனை தொடர்ந்து  தம்பி கார்த்தி உழவன் ஃபவுண்டேஷன் சார்பில்  உழவர் விருதுகள் என்கிற பெயரில் ஒவ்வொரு ஆண்டும்  வேளாண்மையில் தங்களது தனித்துவதத்தை காட்டி வரும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் விருது வழங்கி கௌரவித்து வருகிறார்..

முன்னதாக அதில் உழவு செய்வதை எளிமையாக்கும் புதிய கருவிகளுக்கான பரிசு போட்டி என்ற தலைப்பில் புதிய போட்டியை அறிவித்துள்ளார். சிறு,குறு விவசாயத்தை எளிதாக்கும் நவீன வேளாண் கருவிகளை கண்டு பிடிப்பவர்களை தேர்ந்தெடுத்து முதல் மூன்று கருவிகளுக்கு ரூ.1.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கூறி உள்ளார்.

சென்ற ஆண்டு உழவன்  ஃபவுண்டேஷன் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பங்கள், சிறு குறி விவசாயத்திற்கு உதவும் கருவிகளை கண்டறிந்த இளைஞர்கள், பார்வை திறன் குறைபாடுடைய விவசாயிகள், நலிவடைந்த விவசாயிகள் என பலருக்கும் உதவி தொகையை கார்த்தி வழங்கி இருந்தார்..

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் விழாவில் சூர்யா, கார்த்தி இருவரும் கலந்து கொண்டுள்ளனர்..மேடையில் பேசிய சூர்யா..இன்னும் எனது உறவினர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும்..அதான் எப்போதும் விவசாயிகளின் குரலாக இருப்பதில் விருப்பம் என தெரிவித்துள்ளார்.. மேலும் பேசிய சூர்யா எங்கள் வீட்டில் ஒரு மரம் வளரவில்லை அதை வெட்டி விட சொன்னார்கள் ஆனால் நானும் கார்த்தியும் யூட்யூபில் கூறியபடி அந்த மரத்திடம் பேசியதால் மரம் நன்றாக வளர்ந்துள்ளது. என குறிப்பிட்டுள்ளார்.

அதோடு தனது அகரம் ஃபவுண்டேஷன் குறித்து பேசுகையில் 'அகரம் துவங்கி 18 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. கிட்டத்தட்ட 5000 மாணவர்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர் என சூர்யா பேசியுள்ளார்..

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரோகிணிக்குள் நுழைந்த ஆவி - அதிர்ச்சியில் மனோஜ்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!
டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்; வச்சான் பாரு ஆப்பு; பிக் பாஸில் வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?