
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பட்டி தொட்டியெல்லாம் பேமஸ் ஆன நிகழ்ச்சி பிக்பாஸ்..இதற்கு ஏகோபித்த ரசிகர்கள் உள்ளனர். 100 நாட்கள் பிரபலங்களை ஒரு வீட்டிற்குள் வைத்து அவர்களுக்கு எந்த வித வெளி தொடர்பும் கொடுக்காமல்..போட்டியாளர்கள் தங்களாவே மண்டையை பிய்த்துக்கொண்டு சண்டை போடா வைப்பதுதான் பிக் பாஸ்.. போட்டியாளர்களை கண்காணிக்க எக்கச்சக்க கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன..டாய்லெட் தவிர மற்ற எல்லா இடங்களிலும் கண்காணிப்பு உண்டு..வீட்டிற்குள் வரும் போட்டியாளர்கள் முதல் சில நாட்கள் அமைதியாக இருந்தாலும்..பின்னர் நாட்கள் செல்ல செல்ல கேமராக்கள் இருப்பதை மறந்து இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்..
முதல் சீசனில் இருந்து 5 சீசன் வரை பல செலிப்ரேட்டிசின் முகத்திரைகள் கிழிந்துள்ளன..அதிலும் வனிதா போன்றோரை வலுத்த வயதியவே மாற்றி விட்டது பிக்பாஸ்... தொலைக்காட்சியில் 1 மணிநேரம் ஒளிபரப்பட்டாலும் போதிய உண்மை தகவலை ஒளிபரப்பவில்லை என பலரும் புகார் தெரிவித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என்கிற பெயரில் 24 மணி நேரமும் ஒளிபரப்ப பட்டு வருகிறது..இதில் முந்தைய சீசன்களில் எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்..அதிலும் சுரேஷ் சக்கரவர்த்தி, வனிதா, ஜூலி, அனிதா, அபிராமி,தாமரை, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஜ், நிரூப் என அதிகம் பேசப்பட்ட போட்டியாளர்களை களமிறங்கியுள்ளது பிக்பாஸ் நிறுவனம்.
இந்த அல்டிமேட் ஆரம்பித்தில் இருந்து அம்மா வீட்டுக்கு வந்த திருமணமான பெண் போல அதிக உரிமையுடனும், மண்டகணத்துடனும் நடந்து கொண்டார் வனிதா..பின்னர் அவரே மனா உளைச்சல் தாங்காமல், இரவில் தூங்காமல் வெளியேறிவிட்டார்..
வனிதா வெளியேறியதால் எலிமினேட் ஆன சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும்புது வரவாக விஜய்டிவி பிரபலம் சதீஸ் இறக்கப்பட்டனர்..இதற்கிடையே படப்பிடிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை என கூறி கமலும் விளக்க ..அவருக்கு பதில் சிம்பு வார இறுதி தொகுப்பாளராக கமிட் ஆகியுள்ளார்..
இந்நிலையில் வனிதா சென்றதில் இருந்தே பிக்பாஸ் அல்டிமேட்டில் சுவாரஸ்யம் குறைந்து விட்டதாக ரசிகர்கள் புலம்பி வந்தனர்.. இவர்களின் புலம்பலுக்கு தீனிபோடும் வகையில் பாலாஜி -அபிராமி காதல் கிசுகிசு கிளம்பியுள்ளது.. இவ்விருவரும் சமீபத்தில் ஸ்மோக்கிங் ரூமில் என்ன செய்தனர் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே இருந்து வருகிறது.
இது குறித்து வனிதாவிடம் ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்..இந்த கேள்விக்கு சமூகவலைத்தளத்தில் பதிலளித்த வனிதா..இது உண்மை காதல் இல்லை என கூறியதோடு..நாய் மற்றும் இதய வடிவை பகிர்ந்துள்ளார்..இதை பார்த்த ரசிகர்கள் அப்போ அபிராமி - பாலாஜி இடையே நாய் காதலா என விமர்சித்து வருகின்றனர்..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.