
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரராக இருக்கும் சூர்யா, நடிப்பையும் தாண்டி, தன்னுடைய அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் என்பது நாம் அறிந்தது தான். மேலும் தாமாக முன் சென்று பல உதவிகள் செய்து வருகிறார்.
இந்நிலையில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இயக்குநர்கள் சங்க அறக்கட்டளைக்கு முதல் ஆளாக சென்று, ரூ.10 லட்சத்துக்கான காசோலையை நடிகர் சூர்யா வழங்கியுள்ளார். இதனை, இயக்குநர்கள் சங்க அறக்கட்டளை தலைவர் பிரபல இயக்குநர் ஆர்.வி.உதயக்குமார் சூர்யாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
சூர்யா முதல் ஆளாக இயக்குனர் சங்கத்திற்கு 10 லட்சத்திற்கான காசோலை கொடுத்ததற்கு, பலர் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
சூர்யா நடிப்பில் இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்த்த படங்களான. ‘என்.ஜி.கே’, மற்றும் ‘காப்பான்’ என இரண்டு படங்களும் தோவியை தழுவியது. எனவே அடுத்ததாக வெற்றி படத்தை கொடுத்தே தீர வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ள சூர்யா, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையததும் தலயின் ஆஸ்தான இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தன்னுடைய 39 ஆவது படத்தை நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.