
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாசிட்டிவ் விமர்சனங்களை விட நெகடிவ் விமர்சனங்கள் கிடைப்பவர்கள் தான் , மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகிறார்கள். அந்த வகையில் தற்போது வரை, ஜூலி, மற்றும் ஐஸ்வர்யா தத்தாவை பற்றி பலர் அதிகம் பேசி வருகிறார்கள்.
ஆனால் இந்த நிகழ்ச்சியில்... டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்றிய பிரபலங்களுக்கோ இன்னும் ஒரு படங்கள் கூட வெளியாக வில்லை என்பது சற்று அதிர்ச்சியான விஷயம் தான்.
இதனால் தான் என்னவோ, ஆரம்பத்தில் இருந்தே பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய பிரபலமாகவே தெரிந்தவர் மீரா மிதுன். தேவையில்லாத விஷயத்தை கூட பெரிதாக்கி அதன் மூலம் ஏதேனும் பிரச்சனை வர, இவரே சிக்கி கொள்வார்.
இவர் நடிகர் சேரன் தன்னை தொட்டு தூக்கி வீசியதாக வீண்பழி போட, பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக அவரை வெளியேற்றினர் மக்கள். இது ஒரு பக்கம் இருக்க, இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டு கொண்டிருக்கும் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் கமிட்டாகி நடித்திருந்தார். ஆனால் இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது காத்திருந்தது பேரதிர்ச்சி.
இவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டிருந்தது. மேலும் 'மூடர்கூடம்' படத்தின் இயக்குனர், நவீன் இயக்கத்தில் 'அக்னி சிறகுகள்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார். இந்த படத்தில் இருந்தும் திடீரென இவரை தூக்கி விட்டு, கமலஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராவை ஒப்பந்தம் செய்துள்ளனர் பாக்குழுவினர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வரும் என, ஆசை பட்ட மீராவின் கனவுகள் தற்போது நிராசையாக மாறியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் கிடைத்த வாய்ப்புகளும் பறி போய் உள்ளது தலைமேல் இடி விழுந்தது போல் ஆகியுள்ளது மீராவிற்கு.
தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ட்விட்டர் பக்கத்தில், கொட்டி தீர்த்துள்ளார் மீரா. இவரின் இந்த நிலைக்கு முக்கிய காரணம் சேரன் மீது தவறான இமேஜ்ஜை உருவாகும் விதத்தில் இவர் நடந்து கொண்டது, மற்றும் முகேன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் வெளியான இவருடைய ஆடியோ என கிசுகிசுக்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.