மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தொடரப்பட்ட தேச துரோக வழக்கு..! எதிர்பாராத புதிய திருப்பம்!

By manimegalai aFirst Published Oct 10, 2019, 4:53 PM IST
Highlights

பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர், சுதிர்குமார் ஓஜா என்பவர் 49 பிரபலங்கள் பிரதமருக்கு எழுதிய கடிதம், நாட்டின் நற்பெயரை கெடுக்கும் விதத்தில் இருந்ததாக கூறி இயக்குனர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தார்.

பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர், சுதிர்குமார் ஓஜா என்பவர் 49 பிரபலங்கள் பிரதமருக்கு எழுதிய கடிதம், நாட்டின் நற்பெயரை கெடுக்கும் விதத்தில் இருந்ததாக கூறி இயக்குனர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த பீகார் மாநில நீதிமன்றம், பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பேர் மீதும்,  தேச துரோக வழக்கு பதிவுசெய்ய அனுமதி கொடுத்தது.

இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கை தற்போது பீகார் போலீசார் வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர்.  அதுமட்டுமின்றி, இந்த வழக்கை தொடுத்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம்,  இயக்குனர் மணிரத்னம் நடிகை ரேவதி உள்ளிட்ட பல இந்திய பிரபலங்கள் பலர்,  இந்தியாவில் மதம் என்ற பெயரில் நடந்து வரும் கும்பல் வன்முறைக்கு முடிவு கட்டுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றை வைத்தனர்.  இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும்,  மக்களுக்குள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் விதத்தில் 49 பிரபலங்களும் நடந்து கொண்டதாக பீகாரை சேர்ந்த  சுதிர்குமார் ஓஜா என்பவர் வழக்குப்பதிவு செய்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த போது,  வழக்கறிஞர் தவறான புகார் அளித்ததை பீகார் காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இதனால் தேச துரோக வழக்கை வாபஸ் பெற்றதோடு, இந்த வழக்கைத் தொடர்ந்த வழக்கறிஞர் மீண்டும் தற்போது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

click me!