ரஜினியை தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஓகே சொன்ன வில்லன் நடிகர்!

Published : Oct 10, 2019, 04:06 PM IST
ரஜினியை தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஓகே சொன்ன வில்லன் நடிகர்!

சுருக்கம்

நடிகர் ஜெயம்ரவி 'தனி ஒருவன்' படத்தின் வெற்றிக்கு பிறகு, தான் நடிக்கும் படங்கள் மிகவும் தரமாக இருக்க வேண்டும் என எண்ணுகிறார். இதனால் கதை கேட்கும் போது, மிகவும் தெளிவாக தன்னுடைய கதாபாத்திரம் குறித்து இயக்குனர்களிடம் கேட்டறிந்த பின்னரே ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகிறார்.  குறிப்பாக அறிமுக இயக்குனர் படமாக இருந்தாலும், அவர் சொல்லும் கதை தனக்கு பிடித்து விட்டால்,  உடனடியாக ஓகே சொல்கிறார் ஜெயம் ரவி.

இந்நிலையில், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'கோமாளி' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜனகன படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாட்டில் நடந்து வருகிறது.  இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், நடிகை டாப்ஸி, டயானா எரப்பா, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

தற்போது இந்த படத்தில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில், ரஜினிக்கு வில்லனாக நடித்து, நடிப்பில் செம டஃப் கொடுத்த வில்லன் நடிகர் , நானா படேகர் கமிட்டாகி உள்ளார். 

நடிகை தானுஸ்ரீ தத்தா இவர் மீது, மீடூ புகார் கொடுத்ததில், இருந்து சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த இவர், தற்போது மீண்டும், இந்த படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்
தன்னோட வாழ்க்கைக்கே வழிய காணோம்; இதுல தங்கச்சிக்கு அட்வைஸ் பண்ணும் தங்கமயில்