நயன்தாராவே ஏங்கப்போவது உறுதி... சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் பக்கா மாஸ் சினிமா கெட்-அப்... புகைப்படம் உள்ளே..!

By Thiraviaraj RMFirst Published Oct 10, 2019, 4:01 PM IST
Highlights

விளம்பரங்களில் ஜொலிஜொலித்த சரவணா ஸ்டோர் அருள் அண்ணாச்சி இன்னும் 10 நாட்களில் சினிமா பட ஷூட்டிங் கிளம்பி விட்டார். இந்த நிலையில் தான் அவரது கெட் - அப்பில் ஒரு புகைப்படம் வெளியாகி சமூக வலைதளக்களில் வைரலாகி வருகிறது. 

தமிழ்சினிமாவில் அதிரடி ஹீரோவாக அவதரிக்கப்போகும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடிக்கும் படத்தின் முன்னேற்பாடு வேலைகள் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.  ரூ.30 கோடி பட்ஜெட்டில் அவர் நடிக்கும் படப்பணிகள் தொடங்கி விட்டன.   

இந்தப் படத்தை சரவணா ஸ்டோர் விளம்பரப் படங்களை தொடர்ந்து எடுத்து வரும் இரட்டை இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி இயக்குகிறார்கள். 6 மாதங்களுக்கு முன்பே தொடங்க வேண்டிய படப்பிடிப்பு தள்ளிப்போய் விட்டது. காரணம், பணம் பாதாளம் வரை பாயும் என்று நினைத்து களத்தில் குதித்தவர்களுக்கு பேரதிர்ச்சி. நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். முதல் முயற்சியிலேயே நயன்தாரா நழுவி விட்டார். 

அடுத்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் வந்து முகம் காட்டிய தமன்னா, ஹன்சிகா, உள்ளிட்ட அரை டஜன் ஹீரோயின்களை நாடி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கூட அண்ணாச்சியுடன் டூயட் பாடத் தயாராக இல்லை. விளம்பரம் வேற... படம் வேற... எங்க கேரியரை கெடுத்துக்க விரும்பவில்லை’’ என முகத்திற்கு நேராகவே முறுக்கிக் கொண்டார்களாம். ஹன்சிகாவும் ட்விட் போட்டு அவருடன் நடிக்க விருப்பமில்லை என வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார்.  வேறு வழியின்றி ஹிந்தி ஹீரோயின்களை நாடி மும்பையில் டேரா போட்டிருந்தார்கள்.

 

ஆனாலும் இன்னும் நாயகி கிடைக்கவில்லை. இப்படி இருக்க  அருள் அண்ணாச்சி படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிலையில் தான் அருள் அண்ணாச்சியின் முதல் பட கெட் அப் இது தான் என அவரது வித்தியாசமான புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.  அந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் அண்ணாச்சியின் இந்த கெட் -அப்புக்கு முன் நயன்தாரா நடிக்க வரவிட்டாலும் பரவாயில்லை. 

இந்த கெட் -அப்புக்காக கோவை சரளாவை ஹீரோயினாகப் போட்டாலும் படம் பக்கா மாஸாக இருக்கும் என்கிறார்கள் அவரது ரசிகர்கள். மேலும், சிலர் இது பட கெட் -அப் அல்ல. அவரது படத்தை மார்பிங் செய்து உலவ விட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். 

click me!