
வனிதாவின் 3வது திருமண விவகாரம் குறித்து கொச்சையாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட சூர்யா தேவி என்பவரை போலீசார் கடந்த 22ம் தேதி நள்ளிரவில் கைது செய்தனர். இதையடுத்து சூர்யா தேவிக்கும், அவரை விசாரித்த பெண் காவல் ஆய்வாளருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட சூர்யா தேவி, தனக்கு கொரோனா இல்லை என்றும், போலீசார் வதந்தி பரப்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: பிரபல தொழில் அதிபருடன் பிக்பாஸ் ஜூலிக்கு விரைவில் திருமணம்?... தீயாய் பரவும் தகவல்...!
அப்படியே எனக்கு கொரோனா தொற்று இருந்தாலும் என்னையும் எனது குழந்தையும் தனிமைப்படுத்திக்கொள்ள தயாராக இருப்பதாக கூறிய சூர்யா தேவி, மீண்டும் காவல்துறையையும், வனிதாவையும் விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், போலீஸ்காரங்களோட பிளான் என்னை ஒருநாள் முழுக்க ஸ்டேனில் உட்கார வைத்தால் எந்த பிரச்சனைக்கும் வர மாட்டேன் என நினைத்துவிட்டார்கள். ஒருநாள் முழுக்க என்னை கஷ்டப்படுத்தினார்கள். என் பிள்ளைகள் சாப்பிடாமல் கஷ்டப்பட்டார்கள். மாதவிடாய் நேரத்திலும் இரவு முழுவதும் என்னை கழிப்பறை கூட செல்ல விடாமல் வைத்திருந்தார்கள். போலீஸ்காரங்க என்னை மிகவும் கஷ்டப்படுத்திவிட்டார்கள். வனிதாவை தூக்கி உள்ள போட வேண்டும். என் வலியும், வேதனையும் எனக்கு தான் தெரியும். நான் இறுதி வரை போராடுவேன்.
இதையும் படிங்க: பிக்பாஸ் சீசன் 4-ல் பூனம் பஜ்வா?... கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் வலம் வர எவ்வளவு லட்சம் சம்பளம் தெரியுமா?
நான் ஒருமுறை தான் கல்யாணம் பண்ணியிருக்கேன். வேற யார் புருஷனையும் கூட்டிட்டு வந்து வச்சிக்கல. வனிதாவை ஏன் இன்னம் கைது செய்யவில்லை. வனிதாவை ஒரு கை பார்க்காமல் விட மாட்டேன். எல்லாத்தையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என சூர்யா தேவி அவருடைய யூ-டியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.