
உலக சினிமா அரங்கில் தமிழ் சினிமாவையும் தமிழர்களையும் தலை நிமிர வைத்த பெருமை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானையே சாரும். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் “கோப்ரா” படத்திற்காக இசையமைத்த “தும்பி துள்ளல்” பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. அது மட்டும் இன்றி அவர் இசை அமைத்து இருந்த பாலிவுட் படமான தில் பேச்சாரா என்ற படத்தின் பாடல்களும் அதிகம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
சமீபத்தில் பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை விவகாரம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை மிகவும் பாதித்தது. சுஷாந்தின் கடைசி படமான “தில் பேச்சாரா” படத்தின் இசையமைப்பாளராக மட்டுமல்லாது, திரைத்துறையில் ஒரு நல்ல கலைஞனை இழந்ததற்காக வருத்தப்பட்டார் ஏ.ஆர்.ரகுமான். சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காரணம் இந்தி திரையுலகினர் சிலரால் அவர் புறக்கணிக்கப்பட்டது தான் என்பது போன்ற கருத்தையும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரபல தொழில் அதிபருடன் பிக்பாஸ் ஜூலிக்கு விரைவில் திருமணம்?... தீயாய் பரவும் தகவல்...!
இந்நிலையில் தானும் இந்தி திரையுலகில் இருந்து புறக்கணிக்க படுவதாகவும் தனக்கு எதிராக ஒரு கும்பல் செயல்படுவதாக ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, பிரபல வானொலி நிகழ்ச்சி ஒன்றின் பேட்டியில் பேசிய அவர், இந்தி படங்களில் தான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுவதாக அவர் கூறியுள்ளார். இவர் சுஷாந்த் சிங் நடிப்பில் உருவான தில் பேச்சாரோ படத்தின் இயக்குனர், இசையமைப்பதற்காக தன்னை அணுகிய போது பலர், ஏ.ஆர்.ரகுமானுக்கு இந்த வாய்ப்பை கொடுக்க வேண்டாம் என தடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிக்பாஸ் சீசன் 4-ல் பூனம் பஜ்வா?... கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் வலம் வர எவ்வளவு லட்சம் சம்பளம் தெரியுமா?
இதனால் கொதித்து போன ஏ.ஆர்.ரகுமானின் ரசிகர்கள் #ARRahman என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்தனர். அதில் ஒட்டுமொத்த இந்தியாவையும் இரு கையில் ஆஸ்கர் விருது ஏந்தி தலை நிமிர வைத்த, இசைப்புயலுக்கே இந்த நிலையா? என வருத்தத்துடனும், கோபத்துடனும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.