வனிதாவை யூ-டியூப்பில் விமர்சித்த சூர்யா தேவிக்கு கொரோனா தொற்று... பெண் காவல் ஆய்வாளருக்கும் பரவியதாக தகவல்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 26, 2020, 12:50 PM IST
வனிதாவை யூ-டியூப்பில் விமர்சித்த சூர்யா தேவிக்கு கொரோனா தொற்று... பெண் காவல் ஆய்வாளருக்கும் பரவியதாக தகவல்...!

சுருக்கம்

இந்நிலையில் வனிதா அளித்த கொலை மிரட்டல் புகாரின் அடிப்படையில் சூர்யாதேவி கடந்த 22ம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டார். 

கடந்த 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை வனிதா 3வது முறையாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னரே பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து பிள்ளைகள் இருப்பது வெளியே வந்தது. இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் பேசு பொருளாக மாறியது. அந்த வரிசையில் சேர்ந்து கொண்ட சூர்யா தேவி என்ற பெண், தேவையில்லாமல் வனிதாவின் 3வது திருமணம் குறித்து யூ-டியூப்பில் தரக்குறைவாக விமர்சித்து வந்தார். 

தன்னை பற்றி தேவை இல்லாமலும் அசிங்கமாக பேசி யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்டு வருவதாக சூர்யா தேவி என்ற பெண் மீது வனிதா போரூர்  எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். குறிப்பாக சூர்யா தேவி ஒரு கஞ்சா வியாபாரி என்றும், அதற்கு ஆதாரமாக ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார் வனிதாவின் லாயர்.இதை தொடர்ந்து, வனிதா தன் மீது அவதூறு பரப்பி வருவதாக, சூர்யா தேவியும் பதிலுக்கு வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதில் பொய்யான தகவல்களை வெளியிட்டு தனக்கு மன உளைச்சலை வனிதா ஏற்படுத்தியதாக புகார் அளித்திருந்தார். 

 

இதையும் படிங்க: அழகில் அம்மாவையே ஓரங்கட்டும் ‘ரோஜா’ மதுபாலாவின் அழகிய மகள்கள்.. வைரலாகும் க்யூட் போட்டோஸ்...!

இந்நிலையில் வனிதா அளித்த கொலை மிரட்டல் புகாரின் அடிப்படையில் சூர்யாதேவி கடந்த 22ம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், நடிகை கஸ்தூரி தனது லாயர் மூலமாக சூர்யாதேவிக்கு ஜாமீன் பெற்றுத் தந்தார். ஜாமீனில் வெளியே வந்த சூர்யாதேவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதையும் படிங்க: நடிகர் ராணாவை ஓட ஓட விரட்டும் கொரோனா... தீயாய் பரவும் தொற்றால் திருமண இடம் மாற்றம்?

சூர்யாதேவிக்கு மட்டுமின்றி, அவரிடம் விசாரணை நடத்திய பெண் காவல் ஆய்வாளருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!