சூர்யா,  கார்த்தியை இணைத்து படமெடுக்கும் பிரபல இயக்குனர்...

Asianet News Tamil  
Published : Jun 09, 2017, 05:36 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
சூர்யா,  கார்த்தியை இணைத்து படமெடுக்கும் பிரபல இயக்குனர்...

சுருக்கம்

surya and karthi acting with pandiraj direction

தமிழ் சினிமாவில் தரமான கதைகளை தேர்தெடுத்து இயக்குபவர்களில் ஒருவர் இயக்குனர் பாண்டிராஜ்.

இணைக்க முடியாத ஜோடிகளாக இருந்த 'சிம்பு' , 'நயன்தாராவையே' தான் இயக்கிய, 'இது நம்ம ஆளு' படத்தின் மூலம் இணைந்து நடிக்க வைத்தார்.

இந்நிலையில் தற்போது நீண்ட நாட்களாக  அண்ணன் தம்பிகளை இணைந்து நடிக்க வைக்க பலர் முயற்சி எடுத்து வந்தனர்.  இதனை தற்போது சாத்தியமாக்கியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

தற்போது இவர் ஜி.வி.பிரகாஷை வைத்து இயக்கி வரும் 'செம' படத்தை தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக நடித்து வரும், சூர்யா மற்றும் கார்த்தியை வைத்து இணைத்து இவர் படமெடுக்க உள்ளதாக தெரிகிறது. இந்த திரைப்பாதை சூர்யாவின்  2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் ஒரு சில நாட்களில், இந்த திரைப்படம் குறித்து அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தியேட்டரில் கூட்டமில்லை... OTTக்கு பார்சல் செய்யப்படும் பராசக்தி - எப்போ ரிலீஸ் தெரியுமா?
Sunny Deol Magic: சன்னி தியோல் மேஜிக்கால் டிக்கெட் கவுண்டர்களில் புயல்! பார்டர் 2 முன்பதிவில் மாஸ் வசூல்