5 தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த சூர்யாவின் சூரரைப் போற்று - யார் யாருக்கு என்ன விருது.. முழு விவரம்

By Ganesh A  |  First Published Jul 22, 2022, 4:54 PM IST

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகிய 5 விருதுகளை பெற்றுள்ளது.
 


68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் 5 விருதுகளை வென்றுள்ளது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்களை அடிப்படையாக வைத்து சூரரைப் போற்று திரைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.

இப்படம் 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது. அதன்படி சிறந்த நடிகருக்கான தேசியவிருது சூர்யாவுக்கும், சிறந்த நடிகைக்கான தேசிய விருது அபர்ணா பாலமுரளிக்கும், சிறந்த திரைக்கதைக்கான விருது சுதா கொங்கராவுக்கும், சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர சிறந்த படத்துக்கான விருதையும் சூரரைப்போற்று தட்டித்தூக்கி உள்ளது.

Tap to resize

Latest Videos

click me!