Etharkkum Thunindhavan Trailer : எதற்கும் துணிந்தவன் படக்குழுவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு இன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அதில் எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.
பசங்க, நம்ம வீட்டு பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் என பல்வேறு ஹிட் படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் நடிகர் சூர்யா (suriya) ஹீரோவாக நடித்துள்ளார். ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் நடித்த சூர்யா தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வினய் வில்லனாகவும், நடிகர் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருக்கின்றார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
undefined
தமிழில் தயாராகி உள்ள எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan) படத்தை தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி இப்படம் வருகிற மார்ச் 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படக்குழுவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு இன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அதில் எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது. ஆக்ஷன், செண்டிமெண்ட், காமெடி, ரொமான்ஸ் என பக்கா கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த டிரெய்லராக இது அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள்.... Vikram movie :விக்ரம் பட ஷூட்டிங்கே முடிஞ்சிருச்சு... ஆனா அந்த ஒரு விஷயத்த மட்டும் சஸ்பென்ஸா வச்சிருக்காங்களே?