அஜித் அரசியலுக்கு வருவாரா?..சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மேலாளர் சுரேஷ் சந்திரா!

Kanmani P   | Asianet News
Published : Mar 01, 2022, 09:56 PM IST
அஜித் அரசியலுக்கு வருவாரா?..சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மேலாளர்  சுரேஷ் சந்திரா!

சுருக்கம்

அஜித்துக்கு  அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா.

போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இன்று ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பு மத்தியில் படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதா பிறந்தநாளில் அஜித் படம் வெளியாகி உள்ள நிலையில் அரசியலுக்கு வருவதற்கு தன்னை ஆயத்தம் செய்து கொள்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது என ஜெயலலிதா உதவியாளரான பூங்குன்றன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதவியாளரான பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- காலை நண்பர்களோடு நடைபயணம் மேற்கொண்டேன். அப்போது என்னுடைய நண்பர்களில் ஒருவர் திரையரங்கில் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று கேட்டார். உடனே நான் எதுவும் டிக்கெட் முன்பதிவு செய்து தர வேண்டுமா? என்று கேட்டேன். ஆமாம் அண்ணா, நாளை அஜித்தின் 'வலிமை' திரைப்படம் வெளிவருகிறதல்லவா! என்று உற்சாகத்துடன் சொன்னார். 

வலிமை திரைப்படம்  புரட்சித்தலைவியின் பிறந்த நாளான 24ஆம் தேதி வெளியிடப்படுவது குறித்து இரண்டொரு நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தேன். வலிமை திரைப்படத்தின் தாய் பாசம் பற்றிய பாடல் அம்மா அவர்களின் நினைவு தினத்தில் வெளியிடப்பட்டது. திரைப்படம் அம்மா பிறந்த நாளில் வெளிவர இருக்கின்றது. இது குறித்து, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அந்த நண்பர் கேட்டார். புரட்சித்தலைவியின் மீது அதீத அன்பும், மரியாதையும் கொண்ட அஜித் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு தன்னை ஆயத்தம் செய்து கொள்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. 

அம்மாவின் தொண்டர்களை அரவணைக்க விரும்புகிறாரா? அம்மாவின் கம்பீரம் படத்தின் பெயரில் இருக்கிறது. படத்தில் வரும் காட்சிகளையும், வசனங்களையும் பார்த்துதான் முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்தேன். மாயக் கண்ணன் பிறந்த அஷ்டமியான நாளை படம் வெளிவருவது ஆச்சரியம் தானே! அஜித் அவர்கள் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போகிறாரா? இல்லை நடிகை ஶ்ரீதேவியின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வெளியிடப்படுகிறதா? என்பதற்கு வந்த பிறகே விடை கிடைக்கும். காரணங்கள் எதுவாக இருந்தாலும் எங்களின் திருநாளான தாயின் பிறந்தநாளில் வெளிவரும் சகோதரர் அஜித்தின் 'வலிமை' திரைப்படம் மகத்தான வெற்றி பெற என் இதயமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்திருந்தார்.

முன்னதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ நடிகர் அஜித்குமார் மனதளவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக் கொண்டவர் என்று தெரிவித்திருந்தார். மேலும் ஜெயலலிதாவின் மேலளார் பூங்குன்றன் சங்கரலிங்கம் அஜித் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதனால் அஜித் குறித்த அரசியல் செய்திகள் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் அஜித் அரசியலுக்கு வருவார் என்ற வதந்திகளுக்கு அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அஜித் குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை, எனவே இதுபோன்ற தவறான தகவல்களை ஊக்குவிப்பதைத் தவிர்க்குமாறு மதிப்பிற்குரிய ஊடகவியலாளர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்