சர்க்கார் படத்திலேயே அரபிக் குத்து போட்ட விஜய்...ஆனால் இது சாங் சூட்டிங் இல்ல?..

By Kanmani P  |  First Published Mar 1, 2022, 9:41 PM IST

சர்க்கார் படத்திலிருந்து சண்டைக்காட்சி படப்பிடிப்பு தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பீஸ்ட் (Beast). விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

ஏற்கனவே நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களுக்கு இசையமைத்த அனிருத் (Anirudh), தற்போது 3-வது முறையாக அவருடன் இணைந்துள்ளார். இவர்கள் கூட்டணியில் வெளியாகும் படங்களில் சிவகார்த்திகேயனின் பாடல் வரிகள் நிச்சயம் இருக்கும். அந்தவகையில், பீஸ்ட் (Beast) படத்திற்கும் அவர் பாடல் வரிகளை எழுதி உள்ளார். 

Tap to resize

Latest Videos

சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில், அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடிய  அரபிக் குத்து (Arabic kuthu) பாடல் வெளியானது முதலே, பலரது வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளில் 'ஹலமதி ஹபிபு' தான் பரவலாக ஒலித்து கொண்டிருக்கிறது. இப்பாடலின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது விஜய்யின் (Vijay) மெர்சலான நடனம் தான். ஸ்டைலிஷ் லுக்கில் அவர் போடும் துள்ளல் நடனத்தை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க, பாடலும் வைரல் ஆனது. 

பொதுவாக ஒரு பாடல் டிரெண்டானாலே அதனை பலரும் ரீல்ஸ் செய்ய தொடங்கிவிடுவார்கள். அப்படி இருக்கையில் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய 'அரபிக்குத்து' (Arabic kuthu) பாடலை மட்டும் சும்மாவா விடுவார்களா என்ன. ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

பான் வேர்ல்டு பாடலாக உருவாகி உள்ள இப்பாடல் உலகளவில் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது. வெளியான 48 மணிநேரத்தில் உலகளாவிய டாப் 200 பாடல்களின் பட்டியலில் இடம்பிடித்த முதல் இந்தியப் பாடல் என்கிற பெருமையை பெற்றுள்ளது அரபிக் குத்து (Arabic Kuthu) பாடல். இப்பாடல் 126 இடத்தில் உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் சர்க்கார் படத்திலிருந்து சண்டைக்காட்சி படப்பிடிப்பு தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த சண்டைக்காட்சியில் அரபிக் குத்து ஸ்டெப்பை போட்டபடி சண்டையிடுகிறார் விஜய்...

 

 

 

click me!