பெண்மையை வைத்து கேம் ஆடும் அனிதா...கலாய்த்து தள்ளிய ஜூலி...

Kanmani P   | Asianet News
Published : Mar 01, 2022, 03:30 PM IST
பெண்மையை வைத்து கேம் ஆடும் அனிதா...கலாய்த்து தள்ளிய ஜூலி...

சுருக்கம்

இன்றைய எபிசோடில் கிராமத்து டாஸ்க் கொடுக்கப்படுகிறது...விளையாட்டின் போது அனிதாவுக்கும், ஜூலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது...அப்போது விமன் சப்போர்ட்டர் என கூறி ஏமாற்றுவதாக அனிதாவை..ஜூலி கடுமையாக கலாய்கிறார்...

உலகளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் (BiggBoss) கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானது. விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி அந்த ஆண்டே ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக மாறியது. இந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு என்றால் அது கமல்ஹாசன் தான். அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், கடைசியாக முடிந்த 5-வது சீசன் வரை அவரே தொகுத்து வழங்கினார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகினும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் (Raju) டைட்டில் வின்னர்களாகினர். சமீப காலமாக ஓடிடி தளங்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகின்றன. இதனால் அதில் படங்களை நேரடியாக வெளியிடுவது போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்தியில், பிக்பாஸ் நிகழ்ச்சி பிரத்யேகமாக ஓடிடிக்கு என தயாரிக்கப்பட்டு, வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது தமிழிலும் அதே பார்முலாவை பின்பற்றி, ஓடிடிக்கென பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். பிக்பாஸ் அல்டிமேட் (BiggBoss Ultimate) என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி 4 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கடந்த 3 வாரங்களாக கமல் தொகுத்து வழங்கிய நிலையில், அவர் அரசியல் பணிகள் மற்றும் சினிமா ஷூட்டிங் இருப்பதால் தற்காலிகமாக இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது அவருக்கு பதில் நடிகர் சிம்பு (Simbu) தொகுத்து வழங்கி வருகிறார். 

முன்னதாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக விஜய் டிவி  'கலக்க போவது யாரு' புகழ் சதீஷ் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் வந்துள்ளார்..இவரை வரவேற்பதாக கூறி முட்டை, ஷாம்பு, மஞ்ச தண்ணி என சதீஷை பாடாய் படுத்தும் ப்ரோமோ வெளியாகியுள்ளது...இந்நிலையில் இன்றைய எபிசோடில் கிராமத்து டாஸ்க் கொடுக்கப்படுகிறது...விளையாட்டின் போது அனிதாவுக்கும், ஜூலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது...அப்போது விமன் சப்போர்ட்டர் என கூறி ஏமாற்றுவதாக அனிதாவை..ஜூலி கடுமையாக கலாய்கிறார்...

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்