
நடிகர் சூர்யா நடித்த ஸ்ரீ படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் T.S.முரளிதரன் காலமாகிவிட்டதாக வெளியாகியுள்ள தகவல், திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படமான ஸ்ரீ படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல்களுக்கு இசையமைத்தவர் T.S.முரளிதரன். மேலும் சில ஹிந்தி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்நிலயில் இவர் நேற்று சென்னையில் உள்ள தன்னுடைய வீட்டில் காலமாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்த தகவல்கள் தாற்போது வரை வெளியாகவில்லை.
இவரது இறுதிசண்டங்குகள் இன்று காலை 9 மணிக்கு, சாலிகிராமத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இவர் ஹிந்தியில் இயக்குனர் அகில் கவுரவ் சிங் இயக்கிய 'goodam ' என்கிற படத்திற்கும் இசையமைத்துள்ளார். எனவே ஹிந்தி திரையுலகை சேர்ந்தவர்களும் இவரது மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.