சூர்யா பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..! படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்..!

Published : Jul 19, 2021, 12:23 PM IST
சூர்யா பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..! படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்..!

சுருக்கம்

நடிகர் சூர்யா ஜூலை 23 ஆம் தேதி, தன்னுடைய 46 ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், இவரது பிறந்தநாளை முன்னிட்டு 'சூர்யா 40 ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்து, சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.  

நடிகர் சூர்யா ஜூலை 23 ஆம் தேதி, தன்னுடைய 46 ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், இவரது பிறந்தநாளை முன்னிட்டு 'சூர்யா 40 ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்து, சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சூர்யா ரசிகர்கள்... ஏற்கனவே காமென் டிபி வெளியிட்டு கொண்டாட துவங்கிவிட்ட நிலையில், இவரது பிறந்தநாளை மேலும் சிறப்பிக்கும் விதமாக ஜூலை 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு, சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் 40 ஆவது படத்தின், ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் : கார்த்தியை பார்த்ததும் ஆச்சர்யப்பட்ட விஜய்..! திடீர் சந்திப்பில் நடந்தது என்ன தெரியுமா?
 

கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்த பின் தமிழக அரசு, படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுத்த பின்னர் , அண்மையில் இந்த படத்தின் படப்பிடிப்பும் துவங்க பட்டது. தாற்போது சூர்யா 40 படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக, மலையாள நடிகை ப்ரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். மேலும் மேலும் இந்த படத்தில், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பல படங்களில் ஹீரோவாக நடித்த வினய் நடித்து வருகிறார். 

மேலும் செய்திகள் : ஸ்ட்ராப் லெஸ் டாப்பில்... படு ஹாட் கவர்ச்சியில் நீச்சல் குளம் அருகே விதவிதமான போஸ் கொடுத்த அமலாபால்!
 

இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு இமான் இசையமைக்க, ரத்னா வேலு ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிச்சர்ஸ் நிறுவனம் ஃபர்ஸ்ட் லுக் குறித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த தகவலை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!