கார்த்தியை பார்த்ததும் ஆச்சர்யப்பட்ட விஜய்..! திடீர் சந்திப்பில் நடந்தது என்ன தெரியுமா?

Published : Jul 19, 2021, 10:34 AM IST
கார்த்தியை பார்த்ததும் ஆச்சர்யப்பட்ட விஜய்..! திடீர் சந்திப்பில் நடந்தது என்ன தெரியுமா?

சுருக்கம்

நடிகர் விஜய் மற்றும் கார்த்தி இருவரும் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நடந்து வரும் நிலையில், இருவரும் திடீர் என சந்தித்து கொண்டது பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.  

நடிகர் விஜய் மற்றும் கார்த்தி இருவரும் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நடந்து வரும் நிலையில், இருவரும் திடீர் என சந்தித்து கொண்டது பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்: தலைவரின் ஜப்பான் ரசிகர்கள் கொண்டாடும் 'தர்பார்' திருவிழா! முதல் நாளே ஹவுஸ் ஃபுல்... வைரல் வீடியோ!
 

தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக துவங்குவதால் தாமதம் ஏற்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், தமிழக அரசு அடுத்தடுத்த தளர்வுகள் அளித்து, படப்பிடிப்புகள் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படம் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் போடப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில் நடந்து வருகிறது.

அதே போல் நடிகர் கார்த்தி இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடித்து வரும், 'சர்தார்' படத்தின் படப்பிடிப்பும் கடந்த வாரம் துவங்கிய நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பும் தற்போது சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் தான் செட் அமைத்து நடந்து வருகிறது. விஜய் மற்றும் கார்த்தி நடித்து வரும் படப்பிடிப்புகள் எதிர் எதிரான நடந்து வருகிறது. எனவே கார்த்தி மற்றும் விஜய் சந்தித்து கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

மேலும் செய்திகள்: அல்ட்ரா மாடர்ன் உடையில்... காதலரோடு மும்பையில் வலம் வரும் ஸ்ருதிஹாசன்..! ரீசென்ட் போட்டோஸ்..!
 

இந்நிலையில், நடிகர் கார்த்தி விஜய் படப்பிடிப்புக்கு வந்ததும் அவரை மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்துள்ளார். அப்போது 'சர்தார்' படத்தின் கெட்டப்பில் இருந்த கார்த்தியை விஜய் ஆச்சர்யத்துடன் பார்த்து, கட்டி பிடித்து வரவேற்றுள்ளார். சில நிமிடங்கள் இருவரும் பேசி கொண்டதாகவும், அப்போது கார்த்தியின் சர்தார் பட கெட்டப்பை விஜய் புகழ்ந்து தள்ளியதாக கூறப்படுகிறது. இந்த தகவலை விஜய் மற்றும் கார்த்தி ரசிகர்கள் வைரலாகி வருகிறார்கள்.   

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!