BB Ultimate : அடடா... கன்டென்ட் கொடுத்தவரையே தூக்கிட்டாங்களே! பிக்பாஸ் அல்டிமேட்டில் முதல் எவிக்‌ஷன் இவர்தான்

Ganesh A   | Asianet News
Published : Feb 06, 2022, 03:53 PM IST
BB Ultimate : அடடா... கன்டென்ட் கொடுத்தவரையே தூக்கிட்டாங்களே! பிக்பாஸ் அல்டிமேட்டில் முதல் எவிக்‌ஷன் இவர்தான்

சுருக்கம்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வார எவிக்‌ஷனுக்காக நிரூப், சினேகன், அனிதா, சுருதி, ஜூலி, வனிதா, சுரேஷ், அபிநய் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். 

தமிழில் தற்போது முதன்முறையாக ஓடிடி தளத்துக்காக மட்டும் பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ள, இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெறும் போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த வார எவிக்‌ஷனுக்காக நிரூப், சினேகன், அனிதா, சுருதி, ஜூலி, வனிதா, சுரேஷ், அபிநய் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். 

இதில் நிரூப், சினேகன், அனிதா, சுருதி, ஜூலி, அபிநய் ஆகியோர் முதலில் காப்பாற்றப்படுகின்றனர். இறுதியில் வனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே குறைவான வாக்குகளை பெற்றதன் காரணமாக சுரேஷ் சக்ரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வெளியேறி உள்ளதால் அவர் வசம் இருந்த கேப்டன்சி பதவியை அவர் சினேகனிடம் கொடுத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!