எத்தனை மனுக்கள் தான் தாக்கல் செய்வீங்க? 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் வெளியீடு குறித்து நீதிமன்றம் தடாலடி!

Published : May 04, 2023, 07:15 PM IST
எத்தனை மனுக்கள் தான் தாக்கல் செய்வீங்க? 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் வெளியீடு குறித்து நீதிமன்றம் தடாலடி!

சுருக்கம்

சர்ச்சைக்குள்ளான, 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் வெளியீட்டில் தலையிட உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது.  

இஸ்லாமிய மத கோட்பாடுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது. இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என எதிர்ப்புகளும் வலுத்து வருகிறது. மேலும் சமீப காலமாக முஸ்லிம் சமூகத்தினர், ஒரு மிகப்பெரிய வாழ்வியல் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும்.. இதன் காரணமாகவே காஷ்மீர் பைல்ஸ், புர்கா, தி கேரளா ஸ்டோரீஸ் போன்ற திரைப்படங்கள் அவதூறு பரப்பும் வகையில் வெளியாகி வருவதாக கூறி வருகிறார்கள்.

வேட்டைக்கு தயாரான 'ஜெயிலர்'..! ரிலீஸ் தேதியோடு... அனைத்து நடிகர்களும் இடம்பெற்ற மாஸ் டீசர் வெளியானது!

மேலும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பலரும், இப்படம் சமூகங்களுக்கிடையே வன்மத்தையும், மத மோதலையும், உருவாக்குவதோடு, அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாக குற்றம் சாட்டி வருகிறார்கள். எனவே மே மாதம் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட கேரளா ஸ்டோரிஸ் படத்திற்கு, தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இப்படத்தை வெளியிட்டால் எஸ் டி பி ஐ பற்றி போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.

திரையுலகில் அடுத்த சோகம்..! காதல் கோட்டை உள்ளிட்ட 1000 படங்களுக்கு நடனம் அமைத்த சம்பத்ராஜ் அதிர்ச்சி மரணம்!

எஸ்.டி.பி.ஐ. கட்சி மட்டும் இன்றி, பலர் தொடர்ந்து இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் ஏற்கனவே இப்படத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், மீண்டும் சில மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கை விசாரணை செய்த, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் வெளியீட்டில் தலையிட மறுத்து தெரிவித்ததோடு, இப்படத்திற்கு எதிராக எத்தனை வழக்கு தொடர்வீர்கள் என கேள்வியும் எழுப்பியுள்ளது. மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர், நடிகர், நடிகைகள் குறித்தும் நினைத்து பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!