எஸ் ஜே சூர்யாவின் வரி ஏய்ப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

Published : Feb 26, 2025, 09:01 PM IST
எஸ் ஜே சூர்யாவின் வரி ஏய்ப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

சுருக்கம்

வரி ஏய்ப்பு செய்ததாக எஸ்ஜே சூர்யாவிற்கு எதிராக வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த வழக்கிற்கு எதிராக தாக்கல் செய்த அவரது மனுவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  

நெத்தியடி படம் மூலமாக கேமரா முன்பு தோன்றிய எஸ்ஜே சூர்யா, கிழக்கு சீமையிலே, ஆசை, குஷி ஆகிய படங்களில் நடித்துள்ளார். நியூ படம் தான் அவரை ஹீரோவாக அறிமுகம் செய்தது. அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி என்று பல படங்களில் நடித்தார். ஆனால், இந்த படங்கள் போதுமான வரவேற்பு பெறவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு இறைவி படத்தில் எண்ட்ரி கொடுத்து இப்போ மாஸ் வில்லன்களில் ஒருவராக எல்லா மொழிகளிலும் கலக்கி வருகிறார்.

இந்த நிலையில் தான் வருமானத்திற்குரிய வரியை செலுத்தாத நிலையில் அவர் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர். அதுவும் எஸ்ஜே சூர்யா கிட்டத்தட்ட 8 கோடி வரையில் வரி ஏய்ப்பு செய்திருக்கிறார். இதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த வழக்கை எதிர்த்து எஸ்ஜே சூர்யா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது.

ஜோதிகாவுக்கு அந்த பெயர் வைக்க காரணம் இது தான்; குஷி பட சீக்ரெட்டை உடைத்த எஸ் ஜே சூர்யா!

இதில், எஸ்ஜே சூர்யா மேல்முறையீட்டு மனுவை உரிய காலத்திற்குள்ளாக தாக்கல் செய்யவில்லை. அவர் 467 நாட்கள் தாமதமாக தனது மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதனால் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளமாட்டாது என்று கூறி தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம். இனிமேலும் அவர் மேல்முறையீடு தாக்கல் செய்ய முடியாது. அதனால் எஸ்ஜே சூர்யா வரி ஏய்ப்பு செய்ததாக சொல்லப்படும் 7 கோடியே 57 லட்சத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிரிஷை வீட்டை விட்டு துரத்த விஜயா போடும் புது பிளான்... ரோகிணிக்கு சிக்கல் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
போலீஸ் விசாரணையில் விசாலாட்சி கொடுத்த ட்விஸ்ட்... கொற்றவையிடம் என்ன சொன்னார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்