9 வருட திருமண வாழ்க்கைக்கு எண்டு கார்டு போடும் அமன் வர்மா – வந்தனா லால்வானி!

Published : Feb 26, 2025, 07:19 PM IST
9 வருட திருமண வாழ்க்கைக்கு எண்டு கார்டு போடும் அமன் வர்மா – வந்தனா லால்வானி!

சுருக்கம்

Aman Verma and Vandana Lalvani Divorce : நடிகர் அமன் வர்மாவும் அவருடைய மனைவி வந்தனா லால்வானியும் கொஞ்ச நாட்களாகவே தலைப்புச் செய்திகளில் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களது 10 வருட திருமண வாழ்க்கை மற்றும் விவாகரத்திற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.

Aman Verma and Vandana Lalvani Divorce : நடிகர் அமன் வர்மாவும் அவருடைய மனைவி வந்தனா லால்வானியும் 9 வருஷத்துக்கு பிறகு பிரிவது பற்றி ஏராளமான செய்திகள் சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஜோடி 2014ல 'ஹம்னே லி ஹை ஷபத்' என்ற சீரியல் செட்டில் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டனர். இதையடுத்து இருவரும் காதலில் விழுந்து அதன் பிறகு திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். கடைசியில் கடந்த 2016 ஆம் ஆண்டு அமன் வர்மா மற்றும் வந்தனா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது காதலை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அப்படி இருவருக்குள்ளும் நெருக்கமான பந்தம் இருந்ததாக ரசிகர்கள் நினைத்தார்கள். அதோடு எல்லோரது வாழ்க்கையிலும் இருப்பது போன்று தான் இவர்களது வாழ்க்கையிலும் நிறைய கஷ்டங்கள் எல்லாம் இருந்தது. அதையெல்லாம் கடந்து வந்தார்கள்.

மன்னத் வீட்டை விட்டு வெளியேறி தமிழ் பட ஹீரோயின் வீட்டில் வாடகைக்கு குடியேறும் ஷாருக்கான்! ஏன்?

விவாகரத்து பெற்று பிரியும் அமன் வர்மா – வந்தனா லால்வானி:

நீண்ட நாட்களாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாரு இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கு இடையில் பிரிவு ஏற்பட்டுள்ளது. அவர்களது பிரச்சனையை அவர்களால் சரி செய்து கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு இடையில் இடைவெளி இருந்து கொண்டே வந்துள்ளது. குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்த போதும் கூட அவர்களது கருத்து வேறுபாடு காரணமாக அது நடக்கவில்லை. இதன் காரணமாக கடைசியாக வந்தனா லால்வானி விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

நாட்டாமை தெலுங்கு ரீமேக்கிற்கு பிறகு ஏன் ரஜினிகாந்த் தெலுங்கில் நடிக்கவில்லை?

எவ்வளவோ முயற்சி செய்தும் அதற்கான பலன் இல்லாத நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரைக்கும் இந்த முடிவு குறித்து இருவரும் அறிவிக்கவில்லையாம். அமன் வர்மா பிரபலமான சீரியல் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கியூங்கி சாஸ் பி கபி பகு தி, பாக்பான் மாதிரியான சீரியல்ல நடித்திருக்கிறார். விவாகரத்து குறித்து இப்போது எதவும் பேசாமல் அமைதியாக இருக்கும் அமன் வர்மா விரைவில் தனது வழக்கறிஞர் மூலமாக சரியான நேரத்தில் பதில் சொல்வேன் என்று சொல்லியிருக்கிறார்.  வந்தனாவும் தற்போது வரையில் அமைதியாகவே இருக்கிறார்.

கோடிகளை கொட்டியும் சொதப்பும் அனிருத்; சீப் அண்ட் பெஸ்டாக மாஸ் காட்டும் ஜிவி! கைவசம் இத்தனை படங்களா?
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்