ரஜினிகாந்த்.. 73 வயதிலும் குறையாத அழகு - சித்தர்கள் தரும் மூலிகை தான் காரணமா? நண்பர் பகதூர் சொன்ன சீக்ரெட்!

Ansgar R |  
Published : Aug 14, 2023, 04:40 PM IST
ரஜினிகாந்த்.. 73 வயதிலும் குறையாத அழகு - சித்தர்கள் தரும் மூலிகை தான் காரணமா? நண்பர் பகதூர் சொன்ன சீக்ரெட்!

சுருக்கம்

வயசானாலும், உன் அழகும், ஸ்டைலும் மாறவேயில்லை என்று ரம்யாகிருஷ்ணன், ரஜினிகாந்தை பார்த்து சொல்லும் அந்த வசனம் உண்மை தான் என்பதில் சந்தேகமே இல்லை. 73 வயதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அந்த ஆற்றலும் அவருடைய துடிப்பும் இன்றளவும் பலரால் வியத்தகு வகையில் பாராட்டப்படுகிறது.

பெங்களூருவைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிறந்த நண்பரான ராஜ் பகதூர், ‘ஜெயிலர்’ பட வெளியீட்டின் போது சில ரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று தான் கூறவேண்டும். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ் பகதூர், ரஜினிகாந்த் அதிக அளவில் தியானம் செய்வதன் மூலம் தான் இத்தகைய ஆற்றலை பெறுகின்றார் என்று கூறியுள்ளார். அடிக்கடி அவர் இமயமலைக்கு சென்று, அங்கு பல  முனிவர்களை சந்திப்பாராம்.

அந்த முனிவர்கள் அவருக்கு இளமையாக இருக்க மருத்துவ தாவரங்களின் சில வேர்களைக் கொடுப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த வேரை ஒருமுறை சாப்பிட்டால், ஒரு வார காலத்திற்கு சக்தி தரும், மேலும் உடலுக்கும் அது உற்சாகம் தரும், என்று கூறியுள்ளார் பகதூர். அதனால்தான் 73 வயதாகும் ரஜினிகாந்த், 23 வயது இளைஞனை போல உற்சாகமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அந்த தாவர வேர்கள் தான் அவருக்கு தனி சக்தியை தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹீரோயின்களை மிஞ்சும் அழகு... ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனின் மனைவியா இது? மோனிஷாவின் பியூட்டிபுல் போட்டோஸ்

ரஜினியின் ஒவ்வொரு படமும் திருவிழா தான் என்று கூறிய அவர், “ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன்பு எனக்கு போன் செய்து, படத்தைப் பார்த்து விமர்சனம் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்" என்று கூறினார். மற்றவர்கள் படம் நன்றாக இருக்கிறது என்று மட்டும் சொல்வார்கள், ஆனால் நான் அவருக்கு சரியான கருத்தைச் சொல்வேன். 

அவர் கடந்த 53 வருடங்களாக என் நண்பன், ஆகவே நான் பயப்படுவதில்லை, விஷயங்களை உள்ளபடியே தெளிவாகச் சொல்கிறேன். அது ரஜினிகாந்துக்கும் தெரியும்” என்று விளக்கமளித்தார். “ஒவ்வொரு படம் வெளியான பிறகும் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று பூஜைகள் நடத்திவிட்டு வருவார். உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், கடந்த நான்கு ஆண்டுகளாக இமயமலைக்கு செல்ல முடியவில்லை. இந்த வருடம் அவர் போய்விட்டார். ஆனால் அவர் என்னை அழைத்தபோது, ​​​​வடக்கில் கனமழை இருப்பதால் போக வேண்டாம் என்று அறிவுறுத்தினேன். ஆனால் அவர் என்ன முடிவெடுத்தாலும் அதைச் செய்துமுடிக்கும் பழக்கம்கொண்டவர் அவர், ஆகவே அவர் புறப்பட்டுவிட்டார்” என்று அவர் கூறினார்.

“ரஜினிகாந்தின் சூப்பர்ஹிட் படங்களில் எனக்கு ‘பாஷா’ மிகவும் பிடிக்கும், அதேபோல், 73 வயதிலும், ஜெயிலர் படத்திலும் அதே மாஸ் நடிப்பை தக்கவைத்திருக்கிறார் ரஜினி. ‘பாஷா’ படத்தைப் போலவே இந்தப் படமும் சரித்திரம் படைக்கப் போகிறது,” என்றார் பகதூர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் நட்பு நீடித்து வருகின்றது, அவர் நடத்துனராக பணியாற்றியபோது நான் அந்த பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்தேன் என்றார் அவர்.

பள்ளி மாணவியாக மாறிய பிக்பாஸ் ஜனனி..! ஸ்கர்ட் அண்ட் ஷர்ட்டில் நடத்திய வேற லெவல் போட்டோ ஷூட்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மாமனார் - மருமகன் மோதல்; குடும்ப சண்டையால் பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2; ஹைலைட்ஸ்!
2025-ம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கி கல்லாகட்டிய டாப் 5 தமிழ் ஹீரோஸ்... ரஜினியை முந்திய அஜித்..!