Rajinikanth : வேட்டையன் பராக்.. ஞானவேல் இயக்கத்தில் "தலைவர் 170" - ரிலீஸ் எப்போது? Lyca கொடுத்த மாஸ் அப்டேட்!

Ansgar R |  
Published : Apr 07, 2024, 04:48 PM IST
Rajinikanth : வேட்டையன் பராக்.. ஞானவேல் இயக்கத்தில் "தலைவர் 170" - ரிலீஸ் எப்போது? Lyca கொடுத்த மாஸ் அப்டேட்!

சுருக்கம்

Vettaiyan Release Update : தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து "வேட்டையன்" என்ற படத்தை இயக்கி வருகின்றார் பிரபல இயக்குனர் ஞானவேல்.

தமிழ் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி நாயகனாக வளம் வரும் நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்தாண்டு அவருடைய நடிப்பில் வெளியான, இயக்குனர் நெல்சன் திலிப் குமாரின் "ஜெயிலர்" திரைப்படம் உலக அளவில் சுமார் 640 கோடி ரூபாயை வசூல் செய்து மாபெரும் வெற்றி திரைப்படமானது.

அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடிக்க, அண்மையில் வெளியான "லால் சலாம்" திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை, இந்நிலையில் அடுத்தபடியாக பிரபல இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கும் "வேட்டையன்" என்கின்ற திரைப்படத்தில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வருகிறார். 

Gopinath : 13 கிலோ துணி மூட்டையோடு தெரு தெருவா திரிஞ்சேன்... நீயா நானாவில் கோபிநாத்தை கண்கலங்க வைத்த தருணம்

ஏற்கனவே இந்த திரைப்படம் குறித்த தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றது, கடந்த 2010ம் ஆண்டு வெளியான "ரத்த சரித்திரம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாக திரையுலகில் அறிமுகமானவர் தான் டி.ஜி ஞானவேல். "பயணம்" மற்றும் "தோனி" உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் இவர் தமிழ் மொழிக்கான வசனங்களை எழுதியது குறிப்பிடத்தக்கது. 

காரணம் இயக்குனர் ஞானவேல், தமிழ் இலக்கியத்தில் பிஎச்டி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான "கூட்டத்தில் ஒருவன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலக அறிமுகமான ஞானவேல், கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான "ஜெய் பீம்" என்கின்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை இயக்கி புகழின் உச்சிக்கே சென்றார். 

தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து "வேட்டையன்" திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வரும் நிலையில், இந்த திரைப்படத்தின்  தயாரிப்பு நிறுவனமான லைகா தற்பொழுது ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் அக்டோபர் மாதம் "வேட்டையன்" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. 

நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தீபாவளி வர உள்ள நிலையில், அதற்கு முன்னதாக "வேட்டையன்" திரைப்படம் நீண்ட நாள் வார இறுதியில் குறி வைத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jackie : அகவை 70.. அடியெடுத்து வைத்த ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் - அவரின் Net Worth எவ்வளவு தெரியுமா?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

புஷ்பா 2 நெரிசல் வழக்கில் திடீர் ட்விஸ்ட்... 11வது குற்றவாளியாக அல்லு அர்ஜுன் பெயர் சேர்ப்பு
கன்னட நடிகர்கள் கேமியோ ரோலில் நடிக்கிறோம்; ஆனா எங்க படங்களில் யாரும் நடிக்க வருவதில்லை - கிச்சா சுதீப் ஆதங்கம்