இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஆசைப்பட்டு போட்ட பாட்டு ரீச் ஆகாததால், அதே டியூனை வேறொரு படத்தில் பயன்படுத்தி மாஸ் ஹிட் பாடலை கொடுத்துள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த சுக்ரன் படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இதையடுத்து டிஸ்யூம், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன் போன்ற படங்களில் வரிசையாக மாஸ் ஹிட் பாடல்களை கொடுத்ததன் மூலம் கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி. இவர் இசையமைத்த நாக்கு முக்க பாடல் இன்றளவும் உலகளவில் கொண்டாடப்படுகிறது.
இப்படி இசையமைப்பாளராக பல்வேறு மாஸ் ஹிட் பாடல்களை கொடுத்து வந்த விஜய் ஆண்டனி ஹீரோ ஆன பின்னர் படிப்படியாக இசையமைப்பதை நிறுத்திக் கொண்டார். அவர் நடிப்பில் தற்போது ரோமியோ என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 11-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ள விஜய் ஆண்டனி, தான் இசையமைத்த பாடல்கள் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
இதையும் படியுங்கள்... Vignesh Shivan Love: விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் காதலுக்கு ‘லவ் குரு’வாக இருந்தது இந்த மாஸ் நடிகர் தானாம்..!
அதன்படி அவரிடம் நீங்கள் இசையமைத்த பாடல்களில் இந்த பாடலெல்லாம் எப்படி ஹிட் ஆச்சுனு எனக்கே தெரியல என நினைச்ச பாடல்கள் எது என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்ற மேரே பியா பாடல் இந்த அளவு ஹிட் ஆகும்னு நினைக்கல. அதேபோல் உத்தமபுத்திரன் படத்திற்கு நான் இசையமைத்த உசுமுலாரிசே, இடிச்ச பச்சரிசி ஆகிய பாடல்கள், டியூனே கிடைக்காமல் வேறு வழியின்றி ஒரு டியூன் போட்டு நான் போட்ட பாடல்கள். அது இன்று இந்த அளவு கொண்டாடப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது.
அதேபோல், நீங்கள் கன்பார்ம் ஹிட் ஆகும்னு நெனச்சு போட்டு சரியா போகாத பாடல் ஏதாச்சும் இருக்கா என்கிற கேள்விக்கு பதிலளித்த விஜய் ஆண்டனி. அ ஆ இ ஈ படத்துக்காக இசையமைத்த மேனா மினிக்கி பாடல் கன்பார்ம் ஹிட் ஆகும்னு நெனச்சு போட்டாராம் விஜய் ஆண்டனி. ஆனால் அப்பாடல் பெரியளவில் ரீச் ஆகாததால், அதே டியூனை விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற என் உச்சி மண்டைல பாடலுக்கு பயன்படுத்தி ஹிட் கொடுத்ததாக கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... Anirudh Andrea : அந்த வயசுலயே ஆண்ட்ரியா உடன் நெருக்கம்... முதல் காதல் தோல்வி குறித்து மனம்திறந்த அனிருத்