கொரோனா பீதியில் மக்கள்... லேட்டா ட்வீட் போட்டாலும் தமிழக அரசுக்கு நச்சுன்னு கோரிக்கை வைத்த சூப்பர் ஸ்டார்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 19, 2020, 6:31 PM IST
Highlights

கொரோனாவால் மக்கள் மரண பீதியில் இருக்கும் இந்த சமயத்தில் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக கோரிக்கை வைத்திருப்பது நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

உலகில் உள்ள 165 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 2 லட்சமாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது. கொரோனா பீதியால் பல நாடுகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விமானச் சேவைகள், ரெயில் சேவைகள் மற்றும் பஸ், டாக்சி உள்ளிட்ட பொது வாகனங்களும் வெகு குறைவாகவே இயக்கப்படுவதால் பெருநகரங்களில் மக்களின் அவசியமற்ற போக்குவரத்து வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை 160க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அரசும் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. மிகப்பெரிய மால்கள், தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள், கேளிக்கை அரங்கங்களுக்கு, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தையும் இழுத்து மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அட்லிக்கு ஆப்பு வைத்த லோகேஷ் கனகராஜ்... தளபதியை “மாஸ்டர்” பிளான் போட்டு தூக்கிட்டார் போல...!

இதனிடையே திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனோவில் இருந்து தற்காத்து கொள்ள கை கழுவுவதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாக தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். கொரோனாவால் மக்கள் மரண பீதியில் இருக்கும் இந்த சமயத்தில் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக கோரிக்கை வைத்திருப்பது நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

🙏🏻 pic.twitter.com/Rtz4OJmsUG

— Rajinikanth (@rajinikanth)

இதையும் படிங்க: தமிழ் சினிமாவை தட்டித்தூக்கும் சன்பிக்சர்ஸ்... 1000 கோடி பட்ஜெட்டில் போட்ட மெகா பிளான்...!

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக் கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கது. அரசோடு சேர்ந்து மக்கள் நாமும் இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம். இந்த  இக்கட்டான சூழ்நிலையில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் என்று கோரிக்கை வைத்துள்ளார். 
 

click me!